குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு கிடைத்துள்ள தண்டனை என்னவென்று தெரிந்தால், நீங்கள் கோவப்படக்கூடும்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சாலை விபத்துக்களின் காரணமாக, இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர சாலை விபத்துக்களின் காரணமாக, இந்தியாவில் ஓராண்டுக்கு பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இந்த சூழலில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி, நாட்டின் வர்த்தக தலைநகர் மும்பையில் அரங்கேறிய சாலை விபத்து ஒன்று, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

மும்பையை சேர்ந்த ஜானவி கட்கர் என்ற பெண் வழக்கறிஞர், அன்றைய தினம் அதிகாலையில், தனது ஆடி சொகுசு காரை, மும்பை செம்பூர் ஆர்சிஎப் பகுதியில் அதிவேகத்தில் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

இதனால் நிதானம் இல்லாமல் இருந்த ஜானவி கட்கர், காரை தாறுமாறாக ஓட்டி சென்றார். அத்துடன் ராங் சைடில் அவர் காரை செலுத்தினார். அப்போது எதிரே வந்த டாக்ஸி ஒன்றின் மீது, ஜானவி கட்கர் ஓட்டி வந்த ஆடி கார் பயங்கரமாக மோதியது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

இதில், டாக்ஸியின் டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் என மொத்தம் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதவிர 3 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் மும்பை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

விபத்து நடைபெற்ற சமயத்தில், பெண் வழக்கறிஞர் ஜானவி கட்கர் அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் ஜானவி கட்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

ஆனால் வெறும் 58 நாட்கள் மட்டுமே அவர் சிறை வாசத்தை அனுபவித்தார். அதன்பின் நீதிமன்றம் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து விட்டது. இதனால் 58 நாட்களுக்கு பின் ஜானவி கட்கர், சிறையில் இருந்து வெளியே வந்தார்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியன்று, ஜானவி கட்கரின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்து ஆர்டிஓ உத்தரவிட்டார். ஆனால் ஆர்டிஓ பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் ஜானவி கட்கர் முறையிட்டார்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

ஆனால் போக்குவரத்து கமிஷனர் அலுவலகம் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. இதன் காரணமாக 2016ம் ஆண்டு ஜனவரி மாதம், இரண்டாவது முறையாக ஜானவி கட்கரின் டிரைவிங் லைசென்ஸ் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அதாவது ஆர்டிஓ பிறப்பித்த உத்தரவு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

என்றாலும் தனது டிரைவிங் லைசென்ஸை புதுப்பித்தாக வேண்டும் என ஜானவி கட்கர் நினைத்தார். எனவே மும்பை உயர்நீதிமன்றத்தில், இதற்காக சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது தனது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

ஆனால் இம்முறையும் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. ஜானவி கட்கரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது தொடரும் என்ற உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரால், டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க முடியாது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக நடந்து வரும் வழக்கு முடிவடைந்து இறுதி முடிவு எட்டப்படும் வரை, நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஜானவி கட்கர் வாகனங்களை ஓட்ட முடியாது என்கிற ரீதியில் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

ஆக மொத்தத்தில் அவரது டிரைவிங் லைசென்ஸ் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

அலட்சியம் காரணமாக நடைபெறும் இத்தகைய சாலை விபத்துக்களுக்கு இந்தியாவின் சட்ட திட்டங்களும் ஓர் முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சீனா, பிரேசில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

சீனாவில் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.02% முதல் 0.08% வரை இருந்தால், வாகன ஓட்டியின் லைசென்ஸ் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். இதுவே 0.08 சதவீதத்திற்கு மேல் இருந்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 5 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விடும்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

பிரேசிலில் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0%-0.06% வரை இருந்தால், ஓராண்டுக்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். அதே சமயம் 0.06 சதவீதத்திற்கு மேல் இருந்தால், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

சிங்கப்பூரில் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.035% முதல் 0.09% வரை இருந்தால், ரூ.9,500 முதல் ரூ.19 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

இதுவே ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.09 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அங்கு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு, ரூ.23 ஆயிரம் அபராதமும், 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், வழக்கு விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு, உடனே தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக அங்கு சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கிறது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

இதனிடையே குடிபோதையில் வாகனம் ஓட்டி, சாலை விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை தடுப்பதற்கு என இந்தியாவில் தற்போது உள்ள சட்ட திட்டங்கள் எதுவும், சர்வதேச பொது சுகாதார நிறுவனத்தின் தரத்திற்கு ஏற்ப இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

பொதுவாக சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதில், இந்தியா மிகவும் பின்தங்கியே உள்ளது. குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை தடுப்பதற்கான சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் இந்தியா மிகவும் பின்தங்கி காணப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

உலக சுகாதார நிறுவனமானது, குடிபோதையில் வாகனங்களை ஓட்டி சாலை விபத்தை ஏற்படுத்துபவர்களை தடுப்பதற்கான சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை, கடந்த 2015ம் ஆண்டு வெளியிட்டிருந்தது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

இதில் இந்தியாவிற்கு 10க்கு 4 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் 10க்கு 9 மதிப்பெண்களை பெற்று சீனா அசத்தியது. இதுதவிர சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 10க்கு 8 மதிப்பெண்களை பெற்றன. பிரேசில் 10க்கு 7 மதிப்பெண்களை பெற்றது.

குடிபோதையில் கார் ஓட்டி 2 அப்பாவிகளின் உயிரை பறித்த பெண் வக்கீலுக்கு இது மட்டும்தான் தண்டனை...

ஆனால் இந்தியாவின் மதிப்பெண்கள் வெறும் 4 மட்டும்தான். சட்ட திட்டங்களை கடுமையாக்கினால் மட்டுமே, குடிபோதை அரக்கர்களிடம் இருந்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற முடியும் என்பதை இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது.

Most Read Articles
English summary
Mumbai Audi Car Crash: Female Lawyer Can't Renew Driving Licence. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X