மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

2014ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் காருக்கு நான்கு ஆண்டுகள் கழித்து புதுப்பொலிவு கொடுத்துள்ளது ஆடி கார் நிறுவனம். இந்த 4 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பி

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் காரின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

2014ம் ஆண்டு மூன்றாம் தலைமுறை ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது டிடி ஸ்போர்ட்ஸ் காருக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது ஆடி கார் நிறுவனம். இந்த 4 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது க்ரில் அமைப்பின் வலை வடிவமைப்பில் மாற்றங்கள்செய்யப்பட்டுள்ளன. பெரிய ஏர்டேம் மற்றும் புதிய பம்பர் அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்புறத்தில் பம்பர் டிசைனில் மட்டும் சிறிய மாற்றம் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்்டு இருக்கிறது. முன்புற ஸ்பிளிட்டர், அகலமான பின்புற டிஃப்யூசர் போன்ற ஸ்போர்ட்ஸ் காருக்குரிய சமாச்சாரங்கள் தக்க வைக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

புதிய ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் காரில் 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட இருக்கிறது. வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் 18, 19 அல்லது 20 அங்குல அலாய் சக்கரங்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர் பெறுவர். புதிய ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் கார் காஸ்மோஸ் புளூ, பல்ஸ் ஆரஞ்ச் மற்றும் டர்போ புளூ ஆகிய மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

புதிய ஆடி டிடி காரின் உட்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 12.3 அங்குல ஆடி விர்ச்சுவல் காக்பிட் சாதனம், ஆடி டிரைவ் செலக்ட் டைனமிக் ஹேண்ட்லிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. வயர்லெஸ் முறையில் மொபைல்போனை காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிரது

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

பார்க் அசிஸ்ட், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, அதிக நிலைத்தன்மையை உறுதி செய்யும் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. தவிரவும், வழக்கமான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், எஞ்சின் பவர் வெளிப்படுத்தும் அளவை நிகழ்நேரத்தில் காண்பிக்கும் வசதிகள் முக்கியமானவை. வழக்கம்போல் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் வசதிகள் ஏராளமாக உள்ளன.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

ஆடி டிடி ஸ்போர்ட்ஸ் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூன்று விதமான பவரை வெளிப்படுத்தும் மாடல்களில் கிடைக்கும். 40 TFSI மாடலில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 194 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 45 TFSI மாடலில் இருக்கும் அதே எஞ்சின் 245 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டாப் வேரியண்ட் மாடலானது 302 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனை வழங்க வல்லதாக இருக்கும். கூடுதல் சக்திகொண்டதாக வருகிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி டி ஸ்போர்ட்ஸ் கார்... படங்களுடன் தகவல்கள்!!

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு மஸ்டாங் மற்றும் போர்ஷே 718 கேமேன் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
German automaker Audi has revealed the 2018 Audi TT facelift with a sportier exterior design. The new updated Audi TT now also comes with more standard kits and features to keep you engaged. The third-gen Audi TT has received major updates in terms of mechanical components.
Story first published: Monday, July 23, 2018, 18:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X