புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புதிய சொகுசு எஸ்யூவி மாடலின் படங்கள், தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரம்மாண்ட 7 சீட்டர் மாடலாக வர இருக்கும் இந்த பிரம்மாண்

சொகுசு கார் தயாரிப்பில் உலக பிரபலமான ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புதிய சொகுசு எஸ்யூவி மாடலின் படங்கள், தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரம்மாண்ட 7 சீட்டர் மாடலாக வர இருக்கும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி ரக கார் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 என்ற பெயரில் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த புதிய சொகுசு எஸ்யூவி ரக கார் 5,151 மிமீ நீளமும், 2,000 மிமீ அகலமும், 1,805 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியைவிட இது வடிவத்தில் பெரிய மாடலாக இருக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியைவிட 9 அங்குலம் கூடுதல் நீளம் கொண்டது.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் முகப்பில் பொருத்தப்பட்டு இருக்கும் கிட்னி க்ரில் அமைப்பு இதுவரை பிஎம்டபிள்யூ கார்களில் பயன்படுத்தப்பட்ட க்ரில் அமைப்புகளில் பெரிய அளவிலானதாக குறிப்பிடப்படுகிறது. முகப்பில் மிக கச்சிதமான வடிவத்தில் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் வசீகரத்தை கூட்டுகின்றன.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

அட்டைப் பெட்டி போன்ற வடிவமைப்பு இல்லாமல் நளிமான வளைவு நெளிவுகளுடன் இந்த காரின் டிசைன் மிக அசத்தலாக இருக்கிறது. பிஎம்டபிள்யூ கார்களுக்குரிய தனித்துவமான ஸ்போக்குகள் கொண்ட அலாய் சக்கரங்கள், கச்சிதமான டெயில் லைட்டுகளுடன் வாடிக்கையாளர்களை நிச்சயம் வளைக்கும்.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

இந்த காரில் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வர இருக்கிறது. மேலும், கேப்டன் இருக்கைகள் கொண்ட 6 சீட்டர் மாடலையும், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட இருக்கறது. இந்த காரில் இருக்கும் இருக்கைகளை எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் முறையில் மடக்கி, விரிக்க முடியும். இந்த காரில் 326 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் உள்ளது.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் மூன்று பகுதிகளை கொண்டதாக பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டு இருக்கறது. 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு மிக மென்மையான உணர்வை தரும் உயர்தர பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. லெதர் மற்றும் மர அலங்கார வேலைப்பாடுகளும் உண்டு.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

உட்புறம் சாம்பல் மற்றும் நீல வண்ண பாகங்களுடன் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும் இந்த காரின் பிரிமீயம் அந்தஸ்தை உயர்த்தும் விஷயமாக இருக்கும். இந்த காரில் 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், 1,500 வாட் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், எல்இடி இலுமினேட் லைட் சிஸ்டம் கொண்ட சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவியில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மற்றொரு பெட்ரோல் மாடலில் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 456 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

டீசல் மாடலில் 3.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைக்கும். ஒரு மாடலில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 256 பிஎச்பி பவரையும், மற்றொரு மாடலில் இதே 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 400 பிஎச்பி பவரையும் வழங்கும். பிளக் இன் ஹைப்ரிட் மாடலும் சிறிது கால இடைவெளிக்கும் பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவியின் அனைத்து எஞ்சின் ஆப்ஷன்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தர தொழில்நுட்ப வசதியாக கொடுக்கப்பட்ட இருக்கும். இந்த காருக்கு பிரத்யேக ஆஃப்ரோடு பேக்கேஜையும் பிஎம்டபிள்யூ வழங்க இருக்கிறது.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

இந்த எஸ்யூவியில் முன்புறத்தில் டியூவல் விஷ்போன் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 5 லிங்க் செட் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும் பொருத்தப்பட்டு இருக்கிறது. காரின் உயரத்தை கூட்டி குறைக்கும் நுட்பத்துடன் கூடிய அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கிறது.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில்தான் இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி வெளியீடு!

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. 2019ம் ஆண்டின் பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-7 எஸ்யூவியானது ரூ.1 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், ஆடி க்யூ-7 மற்றும் வால்வோ எக்ஸ்சி90 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
BMW has officially unveiled their latest flagship model in its X-range of SUVs, the X7. The BMW X7 comes with all the familiar design cues of the X-range while offering a big and unmistakable road presence.
Story first published: Friday, October 19, 2018, 12:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X