மலிவான விலையில் டட்சன் ரெடி-கோ லிமிடெட் எடிசன் அறிமுகம்.. பட்ஜெட் வாடிக்கையாளர்கள் ஹேப்பி

புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ காரை, டட்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ காரை, டட்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, பண்டிகை காலத்தை குறி வைத்து களமிறக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

புதிய 2018 ரெடி-கோ ஹேட்ச்பேக் காரை, டட்சன் நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்துள்ளது. லிமிடெட் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 2018 ரெடி-கோ கார், 0.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

சிறிய 0.8 லிட்டர் வேரியண்ட் 3.58 லட்ச ரூபாய் என்ற விலையிலும், பெரிய 1.0 லிட்டர் வேரியண்ட் 3.85 லட்ச ரூபாய் என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன (இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை). புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ காரானது, வெள்ளை, சில்வர், சிகப்பு என 3 வண்ணங்களில் கிடைக்கும்.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

நாட்டில் உள்ள அனைத்து நிஸான் மற்றும் டட்சன் டீலர்ஷிப்களில், புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் தற்போது கிடைக்கிறது. இந்தியாவில் வெகு விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

மாருதி சுஸூகி ஆல்டோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு, புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ கடும் போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில், காஸ்மெடிக் அப்கிரேடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மெக்கானிக்கலாக எந்த மாற்றத்தையும் இந்த புதிய மாடல் பெறவில்லை.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் ரூஃப் வ்ராப் (Roof Wrap) உடன் விற்பனைக்கு வந்துள்ளது. காரின் 2 பக்கங்களிலும் பாடி கிராபிக்ஸ் (Body Graphics) செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முன் மற்றும் பின்பக்க பம்பர்களின் (Bumpers) அன்டர்கவர்களிலும் (undercovers) பாடி கிராபிக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

காரின் உள்பகுதியில் கருப்பு மற்றும் சிகப்பு நிற இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரியர் பார்க்கிங் அஸிஸ்ட் சென்சார் (Rear Parking Assist Sensors), டிஸ்டன்ஸ் டிஸ்ப்ளே டிவைஸ் (Distance Display Device) உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

மேலே குறிப்பிட்டுள்ளபடி, 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் புதிய 2018 டட்சன் ரெடி-கோ கார் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் முதலாவது, 799 சிசி பெட்ரோல் இன்ஜின். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 53 பிஎச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

இரண்டாவது, 999 சிசி பெட்ரோல் இன்ஜின். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இந்த இரண்டு இன்ஜின்களும் ஸ்டாண்டர்டாக, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

அதாவது புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ மேனுவல் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படவில்லை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவான விலை கொண்ட கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

எனவே பட்ஜெட் விலையில் ஹேட்ச்பேக் கார் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். முன்னதாக டட்சன் நிறுவனம் ரெடி-கோ காரை லான்ச் செய்தபோது, மாதத்திற்கு 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாக வேண்டும் என எதிர்பார்த்தது.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. ஒரு மாதத்திற்கு ஒட்டுமொத்தமாகவே 2,500-3,000 கார்கள் மட்டுமே விற்பனையானது. ஆனால் தற்போது பண்டிகை காலத்திற்கு முன்னதாக லான்ச் செய்யப்பட்டுள்ள புதிய 2018 லிமிடெட் எடிசன் ரெடி-கோ மாடல் மூலமாக, விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை காலத்தை குறிவைத்து களமிறக்கியது டட்சன்.. புதிய லிமிடெட் எடிசன் ரெடி-கோ கார் அறிமுகம்..

இதனிடையே டட்சன் நிறுவனம் தங்களது அனைத்து கார்களையும், வரும் மாதங்களில் அப்டேட் செய்யவுள்ளது. இதன்படி டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் (Go+) ஃபேஸ்லிஃப்ட் அடுத்த மாதம் லான்ச் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் 2019ம் ஆண்டில்தான் லான்ச் ஆகும்.

{document1}

மேலும்... #டட்சன் #datsun
English summary
New Datsun Redi-GO Limited Edition Launched. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X