இந்த கார் உயிருக்கே ஆபத்து.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி பலியான தொழிலதிபர்

கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். எவ்வளவு முயன்றும் அவரால் காரை விட்டு வெளியே வர முடியவில்லை.

கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். எவ்வளவு முயன்றும் அவரால் காரை விட்டு வெளியே வர முடியவில்லை. சம்பந்தப்பட்ட கார் நாடு முழுவதும் ஆங்காங்கே திடீர் திடீரென தீப்பற்றி எரிவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

குஜராத் மாநிலம் வதோதரா நகரை சேர்ந்த தொழிலதிபர் மிஹிர் பன்ச்சால். வதோதரா நகரில் மிகவும் பிரபலமான நபரான மிஹிர் பன்ச்சால், ஃபோர்டு என்டேவர் கார் ஒன்றை வைத்துள்ளார். சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புடைய இந்த காரை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் வாங்கியிருந்தார்.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

இந்த சூழலில் நேற்று (நவ. 20) காலை 11 மணியளவில், தனது ஃபோர்டு என்டேவர் காரில், மிஹிர் பன்ச்சால் பயணித்து கொண்டிருந்தார். மிஹிர் பன்ச்சால்தான் காரை ஓட்டி சென்றார். வேறு யாரும் காரில் உடன் பயணம் செய்யவில்லை.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

அப்போது காரின் இன்ஜினில் திடீரென தீப்பற்றியது. இதை உடனடியாக கவனித்து விட்ட மிஹிர் பன்ச்சால், ஒரு வழியாக போராடி காரை சாலையோரமாக நிறுத்தினார். அவர் சாலையோரமாக நிறுத்திய நேரத்தில், காரில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

இதனால் மிஹிர் பன்ச்சால் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி விட அவர் முயற்சி செய்தார். ஆனால் அந்த நேரத்தில் அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தார். சீட் பெல்ட்டை கழற்ற அவர் தீவிரமாக முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

துரதிருஷ்டவசமாக சீட் பெல்ட் ஜாம் ஆகி விட்டது. அது செயல்படவே இல்லை. இதனால் சீட் பெல்ட்டை கழற்றி விட்டு, காரை விட்டு மிஹிர் பன்ச்சாலால் வெளியேற முடியவில்லை. கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காருக்குள் மிஹிர் பன்ச்சால் அப்படியே சிக்கி கொண்டார்.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

சாலையோரமாக கார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வந்த நேரத்தில் கார் முழுவதும் தீயில் எரிந்து விட்டது.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

காருக்குள் சிக்கி கொண்டிருந்த மிஹிர் பன்ச்சால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கொளுந்து விட்ட எரிந்த காரில், சீட் பெல்ட்டை கழற்ற முடியாததால், தொழிலதிபர் ஒருவர் சிக்கி கொண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

இத்தனைக்கும் அது புது கார். அதனை வாங்கி ஒரு மாத காலம்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் திடீரென தீப்பற்றி, அதன் உரிமையாளரது உயிரை குடித்து விட்டது. கார் திடீரென தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

ஆனால் இந்தியாவில் ஃபோர்டு என்டேவர் கார் ஒன்று தீப்பற்றி எரிவது இது முதல் முறை அல்ல என்பதும் கவனிக்கத்த விஷயம். டாக்டர் சரனா ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஃபோர்டு என்டேவர் கார் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

அப்போதும் காரின் இன்ஜினில்தான் முதலில் தீப்பற்றியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

டாக்டர் சரனா ரெட்டியின் காரில் தீப்பற்றியது ஏன்? என்பதற்கான காரணமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பாணியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இதில், தொழிலதிபர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

ஆனால் இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து, ஃபோர்டு நிறுவனம் இதுவரை எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஃபோர்டு என்டேவர் எஸ்யூவி வகையை சேர்ந்த கார் ஆகும். என்டேவர் காரை லான்ச் செய்வதற்கு முன்பாக ஃபோர்டு நிறுவனம் அதனை பல்வேறு இடங்களில் டெஸ்ட் செய்து பார்த்தது.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

அப்போது ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு முறை இதேபோல் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. ஆனால் அந்த குறைபாடுகளை ஃபோர்டு நிறுவனம் நிவர்த்தி செய்யாததன் காரணமாகவே தற்போது இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

ஃபோர்டு என்டேவர் கார்கள் தொடர்ச்சியாக திடீர் திடீரென தீப்பற்றி எரிந்து வரும் சம்பவங்கள், நாடு முழுவதும் உள்ள அதன் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வருங்காலங்களில் ஃபோர்டு என்டேவர் காரின் விற்பனை சரிவடையலாம் என கூறப்படுகிறது.

இந்த கார் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உயிரிழந்த தொழிலதிபர்

TV9 Gujarati வெளியிட்டுள்ள செய்தியின்படி, உயிரிழந்த மிஹிர் பன்ச்சாலுக்கு 42 வயதாகிறது. வதோதரா நகர மக்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமான நபராக இருந்து வந்தார். இந்த சூழலில் பரிதாபமான முறையில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெண்டிங் டிரைவ்ஸ்பார்க் யூ டியூப் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ டியூப் சேனலை பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

Most Read Articles

ஃபோர்டு என்டேவர் கார்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
New Ford Endeavour SUV Catches Fire Again– Businessman Burnt To Death. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X