ஃபோர்டு ஃபிகோ காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகமாகிறது!!

சிஎன்ஜி எனப்படும் அழுத்தம் கூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

By Saravana Rajan

சிஎன்ஜி எனப்படும் அழுத்தம் கூட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு அம்சத்துடன் வரும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஃபிகோ காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகமாகிறது!!

ஃபோர்டு ஃபிகோ காருக்கு இந்தியர்கள் மத்தியில் தனி மதிப்பு இருக்கிறது. முதல் தலைமுறை ஃபிகோ கார் மிக இந்தியர்களின் மனம் கவர்ந்த மாடலாக முத்திரை பதித்தது. இந்த நிலையில், இரண்டாம் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு, அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வந்தது. எனவே, ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகமாகிறது!!

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2018 மாடலாக புதிய ஃபோர்டு ஃபிகோ கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது வெளிநாடுகளில் KA+ என்ற பெயரில் விற்பனையில் இருக்கும் இந்த கார் தேவையான மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகமாகிறது!!

இந்த நிலையில், இந்தியாவில் வர இருக்கும் 2018 ஃபோர்டு ஃபிகோ காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன் தவிர்த்து புதிய சிஎன்ஜி எரிவாயு மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த மாடல் தற்போது இந்திய மண்ணில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் ஸ்பை படங்களும் இப்போது வெளியாகி இருக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகமாகிறது!!

புதிய ஃபோர்டு ஃபிகோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் சிறப்பான செயல்திறனையும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் தர வல்லது.

ஃபோர்டு ஃபிகோ காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகமாகிறது!!

இதே எஞ்சின்தான் சிஎன்ஜி மாடலிலும் இடம்பெற இருக்கிறது. சிஎன்ஜி மாடலில் வரும் ஃபோர்டு ஃபிகோ கார் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வு தன்மையையும் பெற்றிருக்கும். இது வாடிக்கையாளர்களை கவரும் அம்சமாக இருக்கும். அதேநேரத்தில், பெட்ரோல் மாடலைவிட பவரை வெளிப்படுத்தும் திறன் சற்றே குறைவாக இருக்கும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஃபோர்டு ஃபிகோ காரின் சிஎன்ஜி மாடல் அறிமுகமாகிறது!!

புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் தக்க வைக்கப்பட இருக்கிறது. பெட்ரோல் மாடல் 95 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடல் 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் புதிய ஃபிகோ காரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Source: Team BHP

Most Read Articles
மேலும்... #ford #ஃபோர்டு
English summary
TeamBHP has managed to spot the new Ford Figo facelift in India, in a CNG avatar. The current Ford Figo comes only in 1.2-litre petrol and 1.5-litre diesel formats and does not have a CNG variant. However, the new spotting hints that Ford India will be introducing CNG-powered Figo models in the near future.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X