புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம்!

இந்திய கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாடல்களில் ஒன்று மாருதி வேகன் ஆர். நகர்ப்புற பயன்பாட்டிற்கான சிறந்த சாய்ஸாக இருந்து வருகிறது. இந்த சூழலில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்பட

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம்!

இந்திய கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாடல்களில் ஒன்று மாருதி வேகன் ஆர். நகர்ப்புற பயன்பாட்டிற்கான சிறந்த சாய்ஸாக இருந்து வருகிறது. இந்த சூழலில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை வேகன் ஆர் காரை மாருதி நிறுவனம் களமிறக்க இருக்கிறது.

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம்!

இந்த புதிய மாடல் அடுத்த மாதம் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இந்த புதிய மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதுடன் அவ்வப்போது ஸ்பை படங்களும் வெளியாகி வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டி வருகிறது.

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம்!

ஸ்பை படங்களின்படி, புதிய மாடலும் டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. மேலும், தற்போது விற்பனையில் உள்ள மாடலின் சாயல் தெரிந்தாலும், அதிக வேறுபாடுகள் கொண்டதாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம்!

மேலும், 2020ம் ஆண்டில் வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ப சிறந்த கட்டமைப்பு தரத்துடன் புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த புதிய மாடல் கூடுதல் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக வசதிகள் கொண்ட டேஷ்போர்டு உள்ளிட்டவற்றுடன் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம் மற்றும் ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம்!

புதிய மாருதி வேகன் ஆர் காரில் 1.0 லிட்டர் கே10பி பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் அறிமுக தேதி விபரம்!

பெட்ரோல் தவிர்த்து சிஎன்ஜி ஆப்ஷனிலும் எதிர்பார்க்கலாம். புதிய மாருதி கார் மைலேஜிலும் மேம்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கார்களில் சிறந்த ஹெட்ரூம் இடவசதி கொண்ட மாடலாகவும் இருக்கும். இது வாடிக்கையாளர்களை கவரும் முக்கிய விஷயமாக இருக்கும்.

Source: GaadiWaadi

Most Read Articles
English summary
Maruti is planning to launch the New Gen Wangon R car on 23rd January 2019 in the Indian market.
Story first published: Wednesday, December 19, 2018, 10:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X