ஹோண்டா நிறுவன கார்களின் விலை ஆக.,முதல் உயர்வு

ஹோண்டா நிறுவனம் தனது தயாரிப்பு கார்களுக்கான விலையை வரும் ஆக., மாதம் முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி உயர்வு மற்றும் போக்குவரத்து செலவு உயர்வுக்காக இந்த விலை உயர்வு அமல் படுத்தப்படுகிறது.

By Balasubramanian

ஹோண்டா நிறுவனம் தனது தயாரிப்பு கார்களுக்கான விலையை வரும் ஆக., மாதம் முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி உயர்வு மற்றும் போக்குவரத்து செலவு உயர்வுக்காக இந்த விலை உயர்வு அமல் படுத்தப்படுகிறது.

ஹோண்டா நிறுவனங்களில் கார்கள் விலை ஆக.,முதல் உயர்வு

ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தங்களது எல்லா கார்களுக்கும் விலை உயர்வை அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வுதற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஹோண்டா அமேஸ் காருக்கும் பொருந்தும். இந்த விலையேற்றம் என்பது ரூ10,000 முதல் ரூ 35,000 வரை இருக்கும். இது வரும் ஆக., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஹோண்டா நிறுவனங்களில் கார்கள் விலை ஆக.,முதல் உயர்வு

கஸ்டம்ஸ் வரி மற்றும் போக்குரவரத்து கட்டண உயர்வு தான் இந்த விலையேற்றத்திற்கு காரணம் என ஹோண்டா நிறுவனம் தெரவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் ஹோண்டா அமேஸ் கார் தான் தற்போது இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காராக இருக்கிறது.

ஹோண்டா நிறுவனங்களில் கார்கள் விலை ஆக.,முதல் உயர்வு

இந்த கார் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட்கள் ரூ 5.59 லட்சத்திலும், டீசல் வேரியன்ட் கார் ரூ 6.69 லட்சத்திலும் விற்பனைக்கு வருகிறது.

ஹோண்டா நிறுவனங்களில் கார்கள் விலை ஆக.,முதல் உயர்வு

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலைஉயர்வின் படி என்ட்ரி லேவல் கார்கள் எல்லாம் தற்போது விற்பனையாகும் விலையில் இருந்து ரூ12,000- ரூ15000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டாப் எண்ட் மாடல் கார்கள் எல்லாம் ரூ25,000 வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா நிறுவனங்களில் கார்கள் விலை ஆக.,முதல் உயர்வு

ஹோண்டா அமேஸ் காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய 2 இன்ஜின் ஆப்ஷன்களும், மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய இரண்டு கியர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்தியாவில் டீசல் வேரியன்ட் காரில் முதல் சிவிடி ஆப்ஷன் உடன் வெளியான கார் மாடல் இது தான்.

ஹோண்டா நிறுவனங்களில் கார்கள் விலை ஆக.,முதல் உயர்வு

ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் மற்றம் டீசல் வேரியண்ட்கள் 64:36 என்ற கணக்கில் விற்பனையாகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை பொருத்தரவை 74:26 என்ற கணக்கில் விற்பனையாகி வருகிறது.

ஹோண்டா நிறுவனங்களில் கார்கள் விலை ஆக.,முதல் உயர்வு

ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 பிஎஸ் பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில் மேனுவல் ஆப்ஷனாக 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி ஆப்ஷனும் உள்ளது.

ஹோண்டா நிறுவனங்களில் கார்கள் விலை ஆக.,முதல் உயர்வு

அதேபோல டீசல் வேரியன்டை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 100 பிஎஸ் பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பவரும் டார்க்கும் மேனுவல் கியர் பொருத்தப்பட்ட கார்களுக்கானது.சிவிடி கியர் ஆப்ஷனை பொருத்தவரை 80 பிஎஸ் பவரையும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
New Honda Amaze about to get price hike.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X