புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் டீசல் மாடல் அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இந்த சிஆர்வி டீசல் மாடல் வரும் தீபாவளி ப

By Saravana Rajan

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் டீசல் மாடல் விற்பனைக்கு வர இருப்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஹோண்டா பிரியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கும் இந்த பிரிமியம் எஸ்யூவியின் இந்திய வருகை குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி இதுவரை பெட்ரோல் மாடலில் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் டீசல் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இந்த சிஆர்வி டீசல் மாடல் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. புதிய வடிவமைப்பு, கூடுதல் சிறப்பம்சங்கள், டீசல் எஞ்சின் போன்றவை இந்த மாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், பெரிய அளவிலான க்ரோம் க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த எஸ்யூவியானது 4,571மிமீ நீளமும், 1,885மிமீ உயரமும், 1,667மிமீ அகலமும் கொண்டதாக இருக்கிறது. 2,662மிமீ வீல் பேஸுடன் உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த 7 சீட்டர் மாடல் சிறப்பான இடவசதியை அளிக்கும். 18 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

இந்த 7 சீட்டர் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. உட்புறத்தில் மென்மையான உணர்வை தரும் வகையிலான பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஃப்ளோட்டிங் அமைப்புடைய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. சேட்டிலைட் நேவிகேஷன் வசதியை அளிக்கும்.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. 0 -100 கிமீ வேகத்்தை 11.2 வினாடிகளில் எட்டிவிடும்.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

சர்வதேச அளவில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் 160 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக கிடைக்கும் நிலையில், இந்திய மாடலில் 120 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருவது சற்றே ஏமாற்றம்தான். 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்!!

ரூ.27 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

Source:AutoCarIndia

Most Read Articles
English summary
New Honda CRV diesel SUV India launch Details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X