புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்!

வரும் அக்டோபர் மாதம் புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடல் இந்தியாவில்அறிமுகமாகிறது. இந்த எஸ்யூவியில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 3

By Saravana Rajan

வரும் அக்டோபர் மாதம் புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்!

முதல்முறையாக ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி டீசல் மாடலிலும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. நீண்ட தாமதத்திற்கு பின் புதிய தலைமுறை மாடலாக இந்தியா வரும் புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்!

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற போட்டியாளர்களைவிட இது தனித்துவமான க்ராஸ்ஓவர் டிசைனில் வருவதால், வாடிக்கையாளர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இதுவரை பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைத்து வந்த ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி இப்போது டீசல் மாடலிலும் இந்தியர்களுக்கு கிடைக்க இருக்கிறது.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். பேடில் ஷிஃப்ட் வசதியுடன் வருகிறது. அத்துடன், புதிய ஹோண்டா சிஆர்வி ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 152 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கும். பெட்ரோல் மாடல் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. ஆனால், பெட்ரோல் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி இருக்காது என்பது குறையாக தெரிகிறது.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்!

இந்தியாவுக்கான சிஆர்வி எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. ஆனால், புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியில்ல 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும் என்று தெரிகிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்!

புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ரூ.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்!

7 சீட்டர் எஸ்யூவி மாடலாக வரும் புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி ஏராளமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் போட்டியாளர்களை எதிர்கொள்ள வருகிறது. விரைவில் தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source:AutoCarIndia

Most Read Articles
English summary
Honda showcased the new-gen CR-V at the Auto Expo 2018 and the company also confirmed that the crossover SUV will be launched in the Indian market. Now, Autocar India reports that the new Honda CR-V will be launched in the country in October 2018.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X