புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

வரும் 19ந் தேதி புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டிசைனில் சிறிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய இன்ஃபோடெ

By Saravana Rajan

வரும் 19ந் தேதி புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர இருக்கும் காரின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. அங்க அடையாளங்கள் மறைக்கப்படாத அந்த படங்களையும், விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருக்கும் பல சிறப்பம்சங்கள் இந்திய மாடலில் இல்லை என்பது இந்த புதிய படங்கள் மூலமாக புலனாகிறது. ஆனால், சிறிய மாற்றங்களுடன் இந்த கார் வர இருக்கிறது. இந்திய மாடலை 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் சுருக்குவதற்காக இந்த மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம்.

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் காரில் முன்புறத்தில் கருப்பு வண்ணத்திலான பிரம்மாண்ட சட்டத்துடன், க்ரோம் கம்பியுடன் கூடிய க்ரில் அமைப்பு ஹெட்லைட்டுகளை இணைப்பது போல கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட் க்ளஸ்ட்டரின் டிசைனில் மாற்றங்கள் இல்லை. புதிய பம்பர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

க்ரோம் பூச்சு கைப்பிடிகள் மற்றும் 5 ஸ்போக் அலாய் வீல்கள், சிறிய மாறுதல்கள் கூடிய புதியடெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் ஆகியவை முக்கிய விஷயங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

உட்புறத்திலும் அதிக மாற்றங்கள் இல்லை. தற்போதைய ஜாஸ் காரின் டேஷ்போர்டு அமைப்பு அப்படியே தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. சென்டர் கன்சோலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

3 குடுவைகள் கொண்ட புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், புஷ் பட்டன் ஸ்டார்ட், பவர் டெயில் கேட் ஆகியவையும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

புதிய ஹோண்டா ஜாஸ் காரானது 2 பெட்ரோல் வேரியண்ட்டுகளிலும், 3 டீசல் வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 98 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் தேர்வுக்கு இருக்கும்.

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் புதிய படங்கள் வெளியானது!

வரும் 19ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹோண்டா ஜாஸ் கார் சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Image Courtsey: AutocarIndia

Most Read Articles
English summary
Honda is all set to launch the new 2018 Jazz hatchback in the Indian market on July 19, 2018. Now, Autocar India has revealed the first images of the 2018 Honda Jazz and the hatchback gets no styling updates. We have already reported about the variants of the new Jazz and the car gets few new features.
Story first published: Friday, July 13, 2018, 15:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X