புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த மாதம் புதிய க்ரெட்டா விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல்

By Saravana Rajan

இந்தியர்களின் பேராதரவை பெற்ற எஸ்யூவி மாடல் ஹூண்டாய் க்ரெட்டா. சந்தையில் போட்டி அதிகரித்து வருவதை மனதில் கொண்டு புதுப்பொலிவுடன் க்ரெட்டா எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ஹூண்டாய்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

தொடர்ந்து ஸ்பை படங்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த மாதம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் புதிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. இது மிக பிரம்மாண்டமான தோற்றத்தை வழங்குகிறது. புதிய புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. புதிய பம்பர் அமைப்பு, ஏர்டேம் என கூடுதல் வசீகரத்தை பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் இரட்டை வண்ணக் கலவையும் கொடுக்கப்பட இருக்கிறது. வெள்ளை வண்ண காரில் கருப்பு வண்ணக் கூரையுடன் கூடிய டியூவல் டோன் மாடல்கள் விலை உயர்ந்த ரகத்தில் விற்பனை செய்யப்படும். சன்ரூஃப் மற்றும் இரட்டை வண்ண அலாய் சக்கரங்களும் புதிதாக இருக்கும். பின்புறத்திலும் சில மாற்றங்களுடன் வருகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. இதர அம்சங்கள் தற்போது உள்ள மாடல்களிலிருந்து தக்க வைக்கப்படும் என்பது தகவல்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் இல்லை. தற்போது பயன்படுத்தப்படும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும் 154 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1. 4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 224 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 256 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் அனைத்து எஞ்சின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் வருகை விபரம்!!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி தற்போதைய மாடலைவிட சிறிதளவு கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500, ரெனோ கேப்டூர், மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
The new Hyundai Creta facelift has been recently spotted in its undisguised form. The 2018 facelift of the Creta SUV was spotted several times while testing in India. The new SUV is expected to be launched in May this year.
Story first published: Saturday, April 14, 2018, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X