புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய சான்ட்ரோ காரை வரும் அக்., மாதம் 23ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த காரின் லுக் மற்றும் முழு பெயர் வரும் அக்.9 ம் தேதி வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவ

By Balasubramanian

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய சான்ட்ரோ காரை வரும் அக்., மாதம் 23ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த காரின் லுக் மற்றும் முழு பெயர் வரும் அக்.9 ம் தேதி வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனத்தின் ஹிட்டான கார் சான்ட்ரோ இந்த காரின் பெயரை தற்போது அந்நிறுவனம் தயாரித்து தற்போது ஏஎச்2 என கோட் எண் இடப்பட்டுள்ள காருக்கு சூட்டியுள்ளது. எனினும் இந்த பெயர் இரண்டாவது பெயராக தான் இருக்கும் முதல் பெயர் வேறு ஏதாவது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே ஐ10 காரை மாற்றும் போது கிராண்ட் ஐ10 என்ற பெயரிலும் ஐ20 காரை எலைட் ஐ20 எனவும் அறிமுகப்படுத்தியது. அதே போல இந்த சான்ட்ரோ என்ற பெயருக்கு முன்னாள் வேறு ஒரு பெயர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

புதிய சான்ட்ரோ காரை பொருத்தவரை ஐ10 காரை தயாரித்த அதே பிளாட்பார்மில் தான் இந்த காரையும் தயாரிக்கின்றனர். ஆனால் ஐ10 காரைவிட இந்த கார் சற்று பெரிதாக இருக்கும் எனவும், இந்த கார் சான்ட்ரோ ஸிங்க் காரின் அப்டேடட் வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

இதன் இன்ஜினை பொருத்தவரை 1.1 லிட்டர் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்களுடன் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஏஎம்டி ஆப்ஷனை ஸ்மார்ட் டிரைவ் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

இந்த கார் பிஎஸ் 6 எமிஷன் ஆப்ஷன் உடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,. இந்த காரின் டிசைனை பொருத்தவரை அதே டால் பாய் டிசைன் உடன் கூடிய ஹூண்டாய் ஃப்ளூடிக் டிசைன் 2.0 என் தத்துவத்தையும் உள்ளடக்கி இதன் டிசைன் இருக்கும் என எதிர்பார்க்கலாம். காரின் உட்புற கலரை பொருத்தவரை கருப்பு மற்றும் பேட்ஜ் நிறங்களால் டிசைன் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

இந்த கார் இந்தியாவின் பாரத் நியூ வெஹிகில் அசஸ்மென்ட் புரோகிராமின் கீழ் இதன் பாதுகாப்பு டெஸ்ட் செய்ப்பட்டுள்ளது. இன் காரணமாக இதில் அதிகமாக ஏர்பேக், ஏபிஎஸ் வசதி, ஆகியன ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

இந்த கார் நேரடியாக டாடா டியாகோ, மாருதி சுஸூகி செலிரியோ ஆகிய கார்களுக்கு போட்டியாக விளங்கும். ஹூண்டாய் நிறுவனம் இந்த கார் அந்நிறுவனத்தின் சிறப்பான விற்பனையை பெரும் என எதிர்பார்க்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

தற்போது அந்நிறுவனத்தின் இயான் காரை ரிபிளேஸ் செய்து இந்த காரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகவும், விரைவில் இயான் காரை மார்கெட்டில் இருந்து ஹூண்டாய் நிறுவனம் நீக்கி விடும் என்ற பேச்சு அடிபடுகிறது. அதற்கு முக்கிய காரணம் 2020ம் ஆண்டு வரவுள்ள பிஎஸ்6 எமிஷன் கட்டுபாட்டிற்கு இந்த கார் உகந்தது அல்ல என அந்நிறுவனம் கருதுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் அறிமுக தேதி அறிவிப்பு

புதிய சான்ட்ரோ கார் குறித்த முழு தகவல்கள் அக்.,9ம் தேதி அதிகாரபூர்வமாக தெரியவரும். இது போன்ற தகவல்களை உடனடியாக பெற டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்ளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

English summary
New hyundai santro car launching date reveled. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X