புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் புதிய 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருக

By Saravana Rajan

புதிய தலைமுறை ஜீப் ரேங்லர் எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் புதிய 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது அராய் சோதனை மையத்தால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் இந்தியாவில் இந்த புதிய ஆஃப்ரோடு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் இரண்டு ஹார்டு டாப் ரேங்லர் மாடல்களும், ஒரு ரேங்லர் ரூபிகன் மாடலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் படங்களில் உள்ள மாடலில் ஒன்று ஓவர்லேண்ட் என்ற பேட்ஜ் கொண்டதாக இருக்கிறது. இது இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாடலாக கருதப்படுகிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

இந்த ஓவர்லேண்ட் ஆக்சஸெரீ பேக்கேஜ் பொருத்தப்பட்ட மாடலில் பாடி கலர் க்ரில் அமைப்பு, ஹெட்லைட்டுக்கான அலங்கார ஆக்சஸெரீகள், 18 அங்குல விசேஷமான அலாய் சக்கரங்கள், பாடி கலர் ஸ்பேல் வீல், ஓவர்லேண்ட் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. கருப்பு வண்ண இன்டீரியர், லெதர் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

ஸ்பை படங்களில் ஒன்று ரேங்லர் ஜேஎல் சஹாரா என்ற வேரியண்ட்டாக இருப்பதுடன், இது இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் கமாண்ட் டிராக் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இதில், லோ ரேஞ்ச் கியர் ரேஷியோவுடன் கூடிய 2 ஸ்பீடு டிரான்ஸ்ஃபர் கேஸ் கொடுக்கப்பட்டு இருப்பதும் இதன் ஆஃப்ரோடு தகவமைப்புக்கான விசேஷமான அம்சமாக இருக்கும்.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

2018 ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் 3.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 280 பிஎச்பி பவரையும், 347 என்எம் டார்க் திறனையும் வழங்கும். வெளிநாடுகளில் 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. இந்த மாடல் 268 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் ரூபிகன் மாடலும் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இந்த மாடலில் ராக் டிராக் 4 வீல் டிரைவ் சிஸ்டமும், 2 ஸ்பீடு டிரான்ஸ்ஃபர் கேஸும் உள்ளது. இந்த மாடலில் டானா 44 ஆக்சில்களும், ட்ரூ லாக் எலக்ட்ரிக் ஆக்சில் லாக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருப்பதன் முக்கிய சிறப்பு.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

இந்த எஸ்யூவியில் 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், நேவிகேஷன் வசதியும் உள்ளன. 7 அங்குல எல்இடி திரையில் காரின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை ஓட்டுனர்கள் பெற முடியும். லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம் - ஸ்பை படங்கள்!

கடந்த சில ஆண்டுகளாகவே ஜீப் ரேங்லர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், 2 டோர் ரேங்லர் ஜேஎல் மாடல் இப்போது அராய் சோதனையில் இருப்பதால், கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பாக கருத முடியும். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
American automaker Jeep has been testing the new fourth-gen Wrangler in India for quite some time. Now, TeamBHP has spotted the 2018 Jeep Wrangler JL two-door model being tested on Indian roads. The 2018 Wrangler is tested by ARAI, which means that the two-door Jeep Wrangler will be launched soon in the country.
Story first published: Saturday, July 7, 2018, 16:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X