புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய தலைமுறை லெக்சஸ் இஎஸ்300எச் சொகுசு செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹைப்ரிட் மாடலாக வந்துள்ள இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் க

By Saravana Rajan

புதிய தலைமுறை லெக்சஸ் இஎஸ்300எச் சொகுசு செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

டொயோட்டா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் லெக்சஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஏழாம் தலைமுறை இஎஸ்300எச் சொகுசு காரை தற்போது வெகு குறுகிய காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

2019ம் ஆண்டு மாடலாக வந்துள்ள புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருப்பதுடன், அதிக இடவசதி, கூடுதல் தொழில்நுட்ப சிறப்புகளை பெற்றிருக்கிறது. புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் ஹைப்ரிட் மாடலாக வந்துள்ளது.

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

டொயோட்டா நிறுவனத்தின் புதிய டிஎன்ஜிஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்ட லெக்சஸ் கே (ஜிஏ-கே) பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் 66 மிமீ கூடுதல் நீளமும், 45 மிமீ கூடுதல் அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உயரம் 5 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. வீல் பேஸ் 50 மிமீ கூடி இருப்பதால் உட்புறத்தில் இடவசதி வெகுவாக மேம்பட்டுள்ளது.

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

முகப்பில் லெக்சஸ் வாரிசுகளின் முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், 18 அங்குல அலாய் சக்கரங்கள், எல்இடி ஹெட்லைட்டுகள் ஆகியவை காரின் வசீகரத்தை கூட்டும் விஷயங்கள்.

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் 7 அங்குல எல்சிடி திரையுடன் கூடிய கன்ட்ரோல் பேனல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 17 ஸ்பீக்கர்கள் கொண்ட லெவின்சன் ப்யூர் ப்ளே சிஸ்டம், 12.3 அங்குல எலக்ட்ரோ மல்டி விஷன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், மல்டி டிரைவிங் மோடுகள் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப அம்சங்களாக இருக்கின்றன.

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஹைப்ரிட் மாடலாக விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினஅ மற்றும் மின் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் லிட்டருக்கு 22.37 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. யூரோ-6 மாசு உமிழ்வு அம்சத்துடன் வந்துள்ளது.

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் 10 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டில்ட் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. கருப்பு, சாட்டியூ, டோபாஸ் பிரவுன் உள்ளிட்ட ஏராளமான வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ரூ.59.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லெக்சஸ் இஎஸ்300எச் கார் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும். ஜாகுவார் எக்ஸ்இ காருக்கும் இது போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
Fourth Generation Lexus ES 300h Launched In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X