மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்!

வரும் 20ந் தேதி அறிமுகமாக இருக்கும் மேம்படுத்தப்பட்ட மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கி இருக்கிறது. புதிய மாருதி சியாஸ் காரில் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.5 லி

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்!

போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில் மாருதி சியாஸ் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் 20ந் தேதி இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்!

புதிய மாருதி சியாஸ் காரில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய அலாய் வீல்கள், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்!

புதிய மாருதி சியாஸ் காரின் உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. டேஷ்போர்டு வடிவமைப்பில் மாற்றங்கள் இருக்காது என்பது உறுதியாகி இருக்கிறது. அதேநேரத்தில், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.

மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்!

இரண்டு ஏர்பேக்குகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்!

புதிய மாருதி சியாஸ் காரில் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. 5 ஸ்பீடு அல்லது 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் சுஸுகி நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட இருக்கிறது.

மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாமக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் அதிக மைலேஜ் தரும் டீசல் மாடலாக வர இருக்கிறது.

மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்!

புதிய மாருதி சியாஸ் காருக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாருதி நெக்ஸா கார் ஷோரூம்களிலும் முன்பதிவு ஏற்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற முக்கிய போட்டியாளர்களுக்கு இந்த புதிய மாருதி சியாஸ் மாடல் நிச்சயம் கடும் நெருக்கடியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki is all set to launch the new 2018 Ciaz facelift in the country in the coming months. Now, the bookings for the 2018 Maruti Ciaz facelift has commenced across all the Nexa dealerships in the country. This suggests that the new Ciaz will be launched soon.
Story first published: Monday, August 6, 2018, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X