நடுராத்திரியில் முக்காடு போடாமல் சுற்றிய புதிய மாருதி சியாஸ் கார்!!

புதுப்பொலிவுடன் வரும் புதிய மாருதி சியாஸ் காரின் ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.நெக்ஸா புளூ வண்ணத்திலான புதிய மாருதி சியாஸ் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன.

By Saravana Rajan

புதுப்பொலிவுடன் வரும் புதிய மாருதி சியாஸ் காரின் ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்பை படங்கள் தெரிய வரும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

நடுராத்திரியில் முக்காடு போடாமல் சுற்றிய புதிய மாருதி சியாஸ் கார்!!

மாருதி சியாஸ் காரின் முன்பக்க டிசைன் மற்றும் பின்பக்க டிசைன் குறித்த விபரங்களை இந்த ஸ்பை படங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. நெக்ஸா புளூ வண்ணத்திலான புதிய மாருதி சியாஸ் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. புதிய முன்பக்க பம்பர், சி வடிவிலான க்ரோம் பட்டை அமைப்புடன் பனி விளக்குகள் அறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நடுராத்திரியில் முக்காடு போடாமல் சுற்றிய புதிய மாருதி சியாஸ் கார்!!

க்ரோம் கதவு கைப்பிடிகள், புதிய அலாய் வீல்கள், மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் முக்கிய மாற்றமாக கவர்ச்சிகரமான எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. பம்பர் வடிவமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

நடுராத்திரியில் முக்காடு போடாமல் சுற்றிய புதிய மாருதி சியாஸ் கார்!!

புதிய மாருதி சியாஸ் காரில் தற்போதைய 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற இருக்கிறது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்படுகிறது. சுஸுகியின் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிக்கிள் தொழவில்நுட்பமும் டீசல் மாடலின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் வழங்கப்படும்.

நடுராத்திரியில் முக்காடு போடாமல் சுற்றிய புதிய மாருதி சியாஸ் கார்!!

புதிய மாருதி சியாஸ் காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. தவிர, பழைய 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நடுராத்திரியில் முக்காடு போடாமல் சுற்றிய புதிய மாருதி சியாஸ் கார்!!

போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில், உட்புறத்தில் தரமான உதிரிபாகங்களும், பிரிமியம் அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். புதிய டேஷ்போர்டு அமைப்பு, புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரியும் இடம்பெறுகிறது.

நடுராத்திரியில் முக்காடு போடாமல் சுற்றிய புதிய மாருதி சியாஸ் கார்!!

வரும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய மாருதி சியாஸ் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய மாருதி சியாஸ் கார் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்பதுடன் மார்க்கெட்டில் தன்னை தொடர்ந்து முன்னிலைப்படுத்திக் கொள்ளும் என்று நம்பலாம்.

Source: Team BHP

Most Read Articles
English summary
India's leading automaker Maruti Suzuki is gearing up for the launch of the 2018 Ciaz facelift. Maruti Suzuki has been testing the Ciaz facelift for quite some time. Now, TeamBHP has spotted the 2018 Maruti Ciaz facelift completely undisguised in its production avatar.
Story first published: Tuesday, June 26, 2018, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X