புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்படும், மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

By Saravana Rajan

புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்படும், மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை நீண்ட காலமாக மாருதி ஆல்ட்டோ கார் தக்க வைத்து வருகிறது. இதுவரை 35 லட்சம் ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

இந்த நிலையில், மாருதி ஆல்ட்டோ காரின் சந்தையை உடைக்கும் விதத்தில், அவ்வப்போது புதிய கார் மாடல்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. எனினும், வாடிக்கையாளரின் மனதை அறிந்து ஆல்ட்டோ காரை மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறது மாருதி கார் நிறுவனம்.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

ஆனால், இந்த முறை அரசின் புதிய பாதுகாப்புத் தர கொள்கையால் அனைத்து பழைய கார்களும் சிறந்த பாதுகாப்பு தரத்துடன் மேம்படுத்தப்பட இருக்கின்றன. வெளிநாடுகளைப் போல கிராஷ் டெஸ்ட் செய்து, ஸ்டார் ரேட்டிங்கும் வழங்கப்பட இருக்கின்றன. அந்த வகையில், மாருதி ஆல்ட்டோ காரின் பாதுகாப்பு தரமும் மேம்படுத்தப்பட உள்ளது.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

மாருதி ஆல்ட்டோ காரின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட இருக்கின்றன. வடிவமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட இருக்கின்றன. இந்த புத்தம் புதிய மாருதி ஆல்ட்டோ கார் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த வேண்டி இருப்பதுடன், வரும் 2020ம் ஆண்டிற்குள் பிஎஸ்-6 பாதுகாப்பு தரத்திற்கு இணையான எஞ்சின்களை பொருத்துவதும் அவசியம். எனவே, அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாருதி ஆல்ட்டோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

புதிய மாருதி ஆல்ட்டோ கார் தற்போதைய மாடலிலிருந்து வடிவமைப்பில் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். கடந்த பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த கான்செப்ட் ஃப்யூச்சர் எஸ் என்ற மாதிரி கார் மாடலின் டிசைன் தாத்பரியங்கள் மற்றும் சுஸுகி நிறுவனம் ஜப்பானில் விற்பனை செய்யும் பட்ஜெட் கார்களின் டிசைன் தாத்பரியங்களுடன் வடிவைக்கப்பட்டு இருக்கும்.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

புதிய மாருதி ஆல்ட்டோ காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பபெற இருக்கிறது. எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற இருக்கிறது. புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இந்த பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் புதிய மாடலில் தக்க வைக்கப்படும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ கார் வருகை விபரம்!

பட்ஜெட் கார் வாங்குவோர் மற்றும் முதல் முறை கார் வாங்குவோரின் தேர்வில் முதலிடம் வகிக்கும் மாருதி ஆல்ட்டோ கார் பாதுகாப்பு அம்சங்களில் சிறப்பானதாக இல்லை என்ற கருத்து இருக்கிறது. இந்த பிம்பத்தை உடைக்கும் விதத்தில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய மாருதி ஆல்ட்டோ கார் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Source:Business Standard

Most Read Articles
English summary
Maruti Suzuki will launch the all-new Alto in India by February 2019. The new generation Alto hatchback will replace the existing model, currently on sale.
Story first published: Wednesday, June 20, 2018, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X