க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் 2 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருந்தன. 1,079 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் முன்னோக்கி அமர்ந்திருக்கும் வ

க்ராஷ் டெஸ்ட்டில் குறைவான தர மதிப்பீட்டை பெற்று வாடிக்கையாளர்களையும், ரசிகர்களையும் மீண்டும் ஏமாற்றி இருக்கிறது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார். விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று மாருதி ஸ்விஃப்ட். கடந்த பிப்ரவரி மாதம் புதிய தலைமுறை மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்விஃப்ட் காரை அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

இதில், புதிய ஸ்விஃப்ட் வாங்கியோரையும், வாங்க இருப்போரையும் ஏமாற்றும் விதத்தில், ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன. ஆம், மாருதி ஸ்விஃப்ட் கார் க்ராஷ் டெஸ்ட் ஆய்வில் அதிகபட்சமான 5 புள்ளிகளுக்கு 2 புள்ளிகளை மட்டுமே பெற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் 2 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருந்தன. 1,079 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் முன்னோக்கி அமர்ந்திருக்கும் வகையில் 18 மாத குழந்தைக்கு ஒப்பான மனித பொம்மையும், 3 வயது குழந்தையின் மனித பொம்மையும் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

மணிக்கு 64 கிமீ வேகத்தில் காரின் முன்பகுதியை தடுப்பு மீது மோதி சோதனை செய்தனர். இதில், புதிய ஸ்விஃப்ட் காரின் வலுவில்லாத கட்டுமானத்தால், விபத்தின்போது ஓட்டுனரின் மார்பு பகுதி மற்றும் கால்களில் அதிக பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்திலும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. க்ராஷ் டெஸ்ட் சோதனையின்போது பயன்படுத்தப்பட்ட மனித பொம்மைகளின் மார்பு பகுதி அதிக பாதிப்புகளை சந்திக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

இந்த க்ராஷ் டெஸ்ட்டில் 2 ஏர்பேக்குகள் இருந்தும் புண்ணியமில்லாத நிலை இருப்பதாக குளோபல் என்ஏசிபி அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் என்ற கார் நிலையாக செல்வதற்கு உதவிபுரியும் தொழில்நுட்பம் கொண்ட ஐரோப்பிய ஸ்விஃப்ட் கார் க்ராஷ் டெஸ்ட்டில் 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

அதாவது, இந்திய மாடலைவிட ஒரு நட்சத்திர மதிப்பீடு கூடுதலாக பெற்றிருக்கிறது. இந்தியாவில் இந்த பாதுகாப்பு நுட்பம் ஆப்ஷனலாக கூட கொடுக்கப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானதாக கருதப்படுகிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் 2 ஏர்பேக்குகள் உள்பட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வந்ததால், பாதுகாப்பு தரம் நிச்சயம் மேம்பட்டிருக்கும் என்ற நினைத்த வேளையில் இது ஏமாற்றம் தரும் விஷயமாக மாறி இருக்கிறது. இதே கருத்தை குளோபல் என்சிஏபி அமைப்பும் தெரிவித்துள்ளது.

மாருதி கார் நிறுவனத்தின் மற்றொரு மாடலான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல்கள் அண்மையில் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்ட்டில் 5க்கு 4 என்ற தர மதிப்பீட்டை பெற்று ஆறுதல் தந்தன. இந்த நிலையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் மீண்டும் ஏமாற்றியுள்ளது.

Most Read Articles
English summary
New Maruti Swift crash test report released.
Story first published: Monday, October 8, 2018, 16:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X