2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய சொகுசு ரக எஸ்யூவியின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் எஸ்யூவியின் சக்திவாய்ந்த மாடலாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவியில் ஏராளமான கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் இன்று இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு மிக நேர்த்தியான தோற்றத்தை பெற்றிருக்கிறது. செங்குத்தாக அமையப்பெற்ற சிறிய சட்டங்களுடன் கூடிய வலிமையான க்ரில் அமைப்பானது முகப்பை அலங்கரிக்கிறது. பளபளப்பு மிகுந்த இந்த கருப்பு வண்ண க்ரில் அமைப்பை பான் அமெரிக்கா க்ரில் அமைப்பை மிக உயரிய கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் பயன்படுத்துகிறது. அதற்கு இணையான பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவையும் சிறப்பு சேர்க்கிறது.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

முழுவதுமான எல்இடி விளக்குகள் கொண்ட வட்ட வடிவி ஹெட்லைட்டுகள், பானட்டில் இண்டிகேட்டர் விளக்குகள் முகப்பை எடுப்பாக காட்டுகிறது. பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் மடிப்பு போன்ற டிசைனும் பழைய எஸ்யூவி மாடல்களின் பாரம்பரியத்தை பரைசாற்றும் விஷயம். சைடு பீடிங் சட்டங்கள், பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகள் ஆகியவை இந்த காரின் வசீகரத்தை கூட்டுகின்றன.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஜி கிளாஸ் மாடல்களின் பாரம்பரிய அட்டைப்பெட்டி வடிவ அமைப்பு இந்த எஸ்யூவியிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு இருப்பதால், பின்புறம் சதுர வடிவத்தில் எளிமையாக காட்சி அளிக்கிறது. ஸ்பேர் வீல் பின்புற கதவில் பொருத்தப்பட்டு இருப்பதால் எஸ்யூவி மாடலுக்குரிய அந்தஸ்தை எளிதாக பெறுகிறது. எல்இடி டெயில் லைட்டுகள் பம்பருக்கு மேலே மிக தாழ்வாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

மேலும், ஓர் முழுமையான ஆஃப்ரோடு மாடலுக்கு உரிய 241 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட விஷயங்களை பெற்றிருக்கிறது. புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவியில் 21 அங்குல விட்டமுடைய பிரம்மாண்ட அலாய் சக்கரங்கள், காரின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் இரட்டை சைலென்சர்கள் ஆகியவை முத்தாய்ப்பான அம்சங்கள்.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

உட்புறத்தில் உயர்தர லெதர் இருக்கைகள், கார்பன் ஃபைபர் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றிலான உயர்தர பாகங்கள் மூலமாக இன்டீரியர் வேலைப்பாடு மிக தரமாக செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டில் நடுநாயகமாக அமர்ந்து இதன் உட்புற அந்தஸ்தை உயர்த்துகிறது.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

அதனைத்தொடர்ந்து, அகலமான மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இந்த காரின் மிக முக்கிய அம்சம். காரின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை இதில் பெற முடியும். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களில் இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்படுகிறது. விமான விசிறிகள் போன்ற ஏசி வென்ட்டுகள் இந்த காரின் பாரம்பரியத்தை உணர்த்தும் விஷயம்.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவியில் இரட்டை டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க வல்லது.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த சக்திவாய்ந்த எஞ்சினின் சக்தியை சிந்தாமல், சிதறாமல் சக்கரங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நவீன வகை 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மற்றொரு முக்கிய விஷயம், ஆஃப்ரோடு சாகசங்களுக்கு துணை நிற்கும் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உண்டு.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஆஃப்ரோடில் இயக்குவதற்கான தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த இந்த எஸ்யூவி சாதாரண சாலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். இந்த பிரம்மாண்ட எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் தொட்டு அசரடிக்கும் வல்லமை பொருந்தியது. அதேபோன்று, மணிக்கு 220 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. எனவே, சாதாரண சாலைகளிலும் பின்னி பெடலெடுக்கும்.

2018 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி - வேகன் வரிசையில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் ஒரே மாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ.2.19 கோடி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரேஞ்ச்ரோவருக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Mercedes-AMG G63 India-Launch Details: Mercedes-Benz has launched the all-new 2018 G63 AMG SUV in India at Rs 2.19 crore ex-showroom (India).
Story first published: Friday, October 5, 2018, 14:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X