மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்!

கடந்த மார்ச்சில் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் விரைவில் இந்தியா வருகிறது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு, சி வடிவிலான எல்இடி

By Saravana Rajan

புதுப்பொலிவுடன் கூடிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் இந்திய வருகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்!

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் பொலிவு கூட்டப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் அமைப்பு, சி வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்!

மேலும், ஆப்ஷனலாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருந்தன. இந்த நிலையில், இந்த கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்!

தற்போது வெளியான தகவல்களின்படி, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்புகிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்!

இந்தியாவில் இந்த கார் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். தவிரவும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 192 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்!

தவிர, இதுவரை வழங்கப்படும் 250டீ டீசல் மாடலுக்கு பதிலாக சி300 டீசல் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், சி300 பெட்ரோல் மாடலானது கேப்ரியோலே எனப்படும் கன்வெர்ட்டிபிள் மாடலில் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்!

இதேபோன்று, சி கிளாஸ் காரின் சக்திவாய்ந்த ஏஎம்ஜி சி43 மாடலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் மாறுதல்கள் செய்யப்பட்ட 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 385 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்!

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் சி கிளாஸ் கார் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட் மாடல் மூலமாக தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இந்த கார் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Mercedes-Benz is all set to launch its new C-Class facelift in India. The facelift version of the C-class will come to India in October 2018. The facelift version of the sedan offering from Mercedes-Benz was first showcased at the 2018 Geneva Motor Show.
Story first published: Thursday, June 21, 2018, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X