ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை!

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார் மாடல்களில் இந்த எஞ்சின் பயன்ப

By Saravana Rajan

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான, ஸ்பை படங்களும் வெளியாகி இருககின்றன.

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை!

பல்வேறு நாடுகளில் மாசு உமிழ்வு குறைப்பதற்காக பல்வேறு கெடுபிடிகள் மற்றும் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சமசரம் செய்யும் விதத்தில், செயல்திறன் குறையாமல், அதேநேரத்தில் குறைவான மாசு உமிழ்வு திறன் படைத்த பெட்ரோல் எஞ்சின்களை பயன்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன.

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை!

அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் புதிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கார்களில் இந்த புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை!

ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார் மாடல்களில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. தற்போது ஸ்கோடா ரேபிட் காரில் இந்த எஞ்சின் பொருத்தப்பட்டு சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த எஞ்சின் குறைவான மாசு உமிழ்வு திறனுடன் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும்.

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை!

இந்த புதிய எஞ்சின் ஹைப்ரிட் சிஸ்டத்துடனும் அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், மாசு உமிழ்வு வெகுவாக குறையும் என்பதுடன், மிக அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தையும் தரும் வாய்ப்பை பெறும்.

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை!

ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்களின் எம்க்யூபி ஏ0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் புதிய கார்களில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல் இந்த புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை!

ஸ்கோடா ரேபிட் காரில் சோதனை செய்யப்படும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மிகச் சிறப்பான செயல்திறனையும், அதிர்வுகள் குறைவான ரைடிங் அனுபவத்தையும் வழங்கும். மேலும், எடையும் மிக குறைவானதாக இருக்கும்.

Source: Thrustzone

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா
English summary
Skoda has begun testing the new 1.0-litre turbocharged petrol engine in India. The new 1.0-litre engine was spied testing on the company's C-segment sedan, the Rapid.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X