புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்!!

இந்திய ஆஃப்ரோடு பிரியர்களுக்கான சிறந்த தேர்வாக மஹிந்திரா தார் விளங்குகிறது. இந்த நிலையில், முற்றிலும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

By Saravana Rajan

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மஹிந்திரா நிறுவனம் இதே கட்டமைப்பில் புதிய எஸ்யூவி மாடல்களை உருவாக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்!!

அடுத்த ஆண்டு அக்டோபர் 1ந் தேதி முதல் கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் வரைமுறைகளுக்கு உட்பட்டதாக இந்த புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி தயாரிக்கப்படுகிறது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் கட்டமைப்பு மிக வலுவானதாக இருக்கும். டிசைனில் அதிக மாற்றங்ள் இல்லை எனினும், பல நவீன அம்சங்கள் இடம்பெற இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்!!

புதிய தார் எஸ்யூவி புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதுடன், பிஎஸ்-6 மாசு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிர்வுகள் குறைவாகவும், அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும் இருக்கும். ஆஃப்ரோடு மட்டுமின்றி, நெடுஞ்சாலை பயணத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்!!

ஜீப் சிஜே மாடலின் அடிப்படையிலான டிசைன் தாத்பரியங்கள் மஹிந்திரா தார் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய தார் மாடலில் பல்வேறு நவீன அம்சங்களுடன் வர இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் வர இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்!!

உட்புறத்திலும் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கிறது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் வருகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்!!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.5 லிட்டர் மற்றும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. 2.6 லிட்டர் எஞ்சின் 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்!!

தற்போது இரண்டு எஞ்சின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில் இதே எஞ்சின் ஆப்ஷன்கள் தக்க வைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்!!

அடுத்த ஆண்டு புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஃப்ரோடு எஸ்யூவி வாங்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
The Mahindra Thar is one of the best-selling off-road SUVs in India and now Mahindra is working on the next-gen avatar of the utility vehicle. Autocar India reports that the next-gen Mahindra Thar is in the works and will be based on a new platform.
Story first published: Tuesday, April 24, 2018, 11:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X