அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறை தனியார் மயம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவது மூலம் தற்போது உள்ள ஓட்டை உடைசல் பஸ்களை மாற்றி புதிய பஸ்களை குறை

By Bala

இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மாஸ்டர் பிளான் ஒன்றை வகுத்துள்ளது. அதாவது போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதன் மூலம், தற்போது உள்ள ஓட்டை, உடைசல் பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை குறைந்த செலவில் இயக்க முடியும் என்றும், நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் போக்குவரத்து துறையை லாபகரமான பாதைக்கு கொண்டு வர முடியும் என்றும் அரசு நம்புகிறது.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில், அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வரும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இதன்பின் படிப்படியாக மக்கள் மத்தியிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களை பயன்படுத்தும்படி மக்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களையும் பயன்படுத்தும்படி, மாநில அரசுகளும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை கோவை, ஓசூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில், அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இதனிடையே எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டும் என்பதற்காக, மானியம் வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு, ஃபேம் என்ற அமைப்பு மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஃபேம் அமைப்பு முதல் கட்ட பணிகளை முடித்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இந்நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி ஆயோக் அமைப்பு, புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போக்குவரத்து கழகங்களில் தற்போது உள்ள பஸ்கள், டீசல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இதில், பெரும்பாலான ரூட்களில் இயங்கும் பஸ்கள் நஷ்டத்தையே ஏற்படுத்துகின்றன. எனவே ஒரு சில ரூட்களில் கிடைக்கும் லாபத்தை வைத்தே போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இதை கருத்தில் கொண்டு தற்போது தனியார் நிறுவனங்களுக்கு, நிதி ஆயோக் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி தனியார் நிறுவனங்களுக்கு தற்போது உள்ள ரூட் தரப்படும். தனியார் நிறுவனங்கள் அந்த ரூட்டில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க வேண்டும்.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

பஸ் இயக்கம் மற்றும் பராமரிப்பு முழுவதும் தனியாரின் செலவு. பஸ்சின் பேட்டரிக்கு செலவாகும் மின்சாரத்தை அரசு வழங்கும். அத்துடன் பஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அரசு வசூலிக்கும்.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இதில் கிடைக்கும் லாபத்தில், தனியார் நிறுவனங்களுக்கு பங்கு வழங்கப்படும். இதன் மூலம் பஸ்களுக்கான பராமரிப்பும், இயக்கமும் தனியார் வசம் சென்றுவிடும். அத்துடன் தற்போது அரசிடம் உள்ள ஒட்டை, உடைசல் பஸ்களை இனி செயல்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இதற்காகதான் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு, நிதி ஆயோக் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் அரசுடன் பங்குதாரராக சேர, அக். 4ம் தேதிக்குள் ஒப்பந்தங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஒப்பந்தங்கள் மீது, அக்.12ம் தேதி விவாதம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

தற்போது போக்குவரத்து கழகங்கள் எல்லாம் மாநில அரசின் வசம்தான் இருக்கின்றன. ஏற்கனவே மும்பை, ஐதராபாத், மணாலி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், அந்தந்த மாநில அரசுகள், எலெக்ட்ரிக் பஸ்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன. தமிழக அரசு இன்னும் சில நாட்களில் சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை களம் இறக்கவுள்ளது.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இந்நிலையில் நிதி ஆயோக் தற்போது பங்குதாரர்களாக இணைக்கவுள்ள தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள், மாநில அரசிற்கு பிடித்திருந்தால், அவர்களும் அதை பயன்படுத்தி தங்கள் மாநிலங்களில் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். இந்த தகவலை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

இந்தியாவில் தற்போது 1.5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2023ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஓடும் ஒட்டுமொத்த வாகனங்களில் 5 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

எனினும் கடந்த நிதியாண்டில் விற்பனையான ஒட்டுமொத்த வாகனங்களில் வெறும் 1 சதவீத வாகனங்கள்தான் எலெக்ட்ரிக் வாகனங்களாக அமைந்தன. கர்நாடகா, மஹாராஷ்டிரா, உ.பி., ஆந்திரா மற்றும் கோவா மாநிலங்களில் அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

நிதி ஆயோக் அமைப்பு தற்போது திட்டமிட்டுள்ளபடி மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சென்றுவிட்டால், ஆண்டுதோறும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அரசு செலவிட்டு வரும் 300 பில்லியன் டாலர் அதாவது ரூ.20 லட்சம் கோடியை மிச்சப்படுத்த முடியும். மேலும் 1 ஜிகா டன் அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு வெளியாவதையும், 2030ம் ஆண்டிற்குள் குறைக்க முடியும் என தெரியவந்துள்ளது.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

பாலாவின் பார்வையில்:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் டீசல் பஸ்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த நிலைமையை மாற்ற எலெக்ட்ரிக் பஸ்கள் நிச்சயமாக கை கொடுக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இதே திட்டத்தை செயல்படுத்தி பார்த்துள்ளனர். தினம் ரூ.7000 நஷ்டம் ஏற்படுத்தி வந்த ரூட்டில், எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கியதால், ரூ.8000 லாபம் கிடைத்தது. எனவே இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதுதான்.

அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க ரகசிய திட்டம்...

எனினும் இது போன்ற தனியார் மயமாக்கல்களில், அம்பானி, அதானி போன்றவர்கள், தங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை கொண்டு வந்து, கொள்ளை லாபம் எடுத்துகொண்டு போகவும் வாய்ப்புள்ளது. எனவே தனியார் நிறுவனங்களுக்கு பதிலாக, பஸ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கே அரசு இந்த வாய்ப்பை வழங்கும் பட்சத்தில், பஸ்சின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும். மேலும் இந்த செயல்பாடுகளானது, சிறு நிறுவனங்களை ஊக்குவிப்பதாகவும் இருக்கும்.

Most Read Articles
English summary
Niti ayog plans to bring private as partner for electric bus fleet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X