சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

புதிய டீசல் ஆட்டோ ரிக்ஸாக்களுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படாது எனவும், எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டீசல் ஆட்டோ ரிக்ஸாக்களுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படாது எனவும், எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை உண்டாக்கி வருகிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக முன்வைக்கப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

எனவே 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களை ஊக்குவிக்கும் விதமாக, ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் மானியமும் வழங்கப்படுகிறது (மானியம் தொடர்பான விரிவான தகவல்கள் இந்த செய்தியின் 2வது பகுதியில் வழங்கப்பட்டுள்ளது).

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

மத்திய அரசுடன் சேர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வருகின்றன. அரசு அதிகாரிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

இதுதவிர பல்வேறு மாநில அரசுகள் சார்பில் பொது போக்குவரத்திற்காக எலெக்ட்ரிக் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தெலங்கானா மாநில அரசும், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

இந்த சூழலில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், உலகளாவிய பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தெலங்கானா மாநில முதன்மை செயலாளர் அரவிந்த் குமார், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

இதன்படி தெலங்கானா மாநிலத்தில் இனி அனைத்து புதிய ஆட்டோ ரிக்ஸாக்களும் கட்டாயமாக எலெக்ட்ரிக்காகதான் இருக்க வேண்டும். வருங்காலத்தில் புதிய டீசல் ஆட்டோ ரிக்ஸாக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

தெலங்கானா மாநிலத்தில் தற்போது வெறும் 40 எலெக்ட்ரிக் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் 2019ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

மிகுந்த பலன் அளிக்க கூடியவை என்பதால், பொதுமக்கள் மத்தியில் இந்த அறிவிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை விரைவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இன்னும் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடி.. டீசல் ஆட்டோக்களுக்கு தடை.. எலெக்ட்ரிக் பஸ்கள் எண்ணிக்கை உயர்கிறது

இந்த உச்சி மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியின்போது (செப்டம்பர் 7), இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழாக, எலக்ட்ரிக் கார், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

Most Read Articles

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
No New Diesel Auto's To Be Allowed In Telangana. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X