டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி

டூவீலர், கார், கமர்ஷியல் வாகனங்கள், மற்றும் கனரக வாகங்களுக்கான வரிவிதிப்பில் மாற்றம் செய்ய பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி அம்மாநில அமைச்சரவை போக்குவரத்து துறைக்கு பரிந்துரை ஒன்றை அனுப

By Balasubramanian

டூவீலர், கார், கமர்ஷியல் வாகனங்கள், மற்றும் கனரக வாகங்களுக்கான வரிவிதிப்பில் மாற்றம் செய்ய பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி அம்மாநில அமைச்சரவை போக்குவரத்து துறைக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன் படி ஒவ்வொரு காரின் பிராண்ட்டிற்கும், மாடலிற்கும் ஏற்ப வரிவிகித்தத்தை மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி

தற்போது ஒவ்வொரு காரின் திறனை கொண்டும் வரிவிகித்தங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இவர்கள் அளித்த பரிந்துரையின் படி 8%,9%,10% மற்றும் 12 % என 4 பிரிவுகளாக பிரித்து வரி விதிக்கப்பட வேண்டும் எனவும், இது 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை விதிக்கப்படும் விரியாக மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி

இது குறித்து அம்மாநில அமைச்சரவை செயலகத்தின், முதன்மை செயலாளர் அருண்குமார் சிங் கூறுகையில் "" ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்பு வாகன விற்பனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு தகுந்தார் போல் வருமானம் அரசிற்கு இல்லை. அதனால் விரிவிதிப்பு கொள்கையை மாற்ற முடிவு செய்துள்ளோம் என கூறினார்.

டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி

அதன் படி வாகன விலையில் ரூ 1 லட்சத்திற்கு உட்பட்ட வாகனங்களுக்கு ரூ 8 சதவீதமும், ரூ 1-8 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 9 சதவீதமும், ரூ 8-15 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 10 சதவீதமும், ரூ 15 லட்சத்திற்கு மேலான வாகனங்களுக்கு 12 சதவீதமும் வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி

அதே போல பஸ்கள் மற்றும் பயணிகள் வாகனத்திற்கான வரி விதிப்பு கொள்கையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதன் படி ஒவ்வொரு ஆண்டிற்கான அந்த வாகனத்தின் சீட்களின் எண்ணிக்கை, வானகத்தின் திறன், மற்றும் தரம் ஆகியவற்றை வைத்து இந்த சாதாரண வரி, செமி டீலக்ஸ்களுக்கான வரி, டீலக்ஸ்களுக்கான வரி என மூன்று விதமாக வழங்பகப்படுகிறது.

டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி

13-26 எண்ணிக்கை சீட்களை கொண்ட வானகங்களுக்கு ஆண்டிற்கு ரூ 550 வரியாகவும், செமி டீலக்ஸ் வாகனங்களுக்கு ரூ 675 வரியாகவும், டீலக்ஸ் வாகனங்களுக்கு ரூ 860 வரியாகவும் விதிக்கப்படுகிறது.

டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி

அதே போல 27-32 எண்ணிக்கை சீட்களை கொண்ட வாகனங்களுக்கு சாதாரண வரியாக ரூ 600, செமி டீலக்ஸ்களுக்கு ரூ 750, டீலக்ஸ்களுக்கு ரூ 860 என வரி விதிக்கப்படுகிறது.

மற்றும் அதற்கு அதிகமான எண்ணிக்கை சீட்களை கொண்ட வானகங்களுக்கு சாதாரண வரியாக ரூ 700, செமி டீலக்ஸ் வரியாக ரூ 870 மற்றும் டீலக்ஸ் வரியாக ரூ 1,025 விதிக்கப்படுகிறது.

டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி

மேலும் வாகனத்தின் எடையை பொருத்தும் வரி விதிக்கப்படுகிறது. 1000 கிலோ வரையிலா எடை கொண்ட வாகனத்திற்கு ரூ 8000, 1001-3500 கிலோ வரையிலான எடை கொண்ட வாகனங்களுக்கு ரூ6500 என வரி விதிக்கப்படுகிறது. இவற்றிற்கு பிகார் மாநில அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் 7 இடங்களில் சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வசதிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Now, vehicles to be costlier.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X