மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

கமிஷன் தொகை குறைக்கப்பட்டதால் வருவாய் இழந்த ஓலா, உபேர் நிறுவனங்களின் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் அனைத்து தொழில்களும் வெகு வேகமாக கார்ப்பரேட் மயமாகி வருகின்றன. சிறு முதலாளிகளின் கைவசம் இருந்த கால் டாக்ஸி தொழிலும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கால் டாக்ஸி தொழில் தற்போது ஓலா, உபேர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்று விட்டது.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

இதனால் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு கால் டாக்ஸி டிரைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் ஓலா, உபேர் நிறுவனங்களிடம் வேலை செய்ய தொடங்கியது முதல், தங்கள் வருமானம் குறைந்து விட்டது என கால் டாக்ஸி டிரைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

ஏனெனில் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள், கால் டாக்ஸிகளின் டிரைவர்களுக்கு மிக குறைந்த அளவில் மட்டுமே கமிஷன் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால் டாக்ஸி டிரைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

ஓலா, உபேர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைக்கு பின் ஆட்டோக்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு பதிலாக ஓலா, உபேர் நிறுவனங்களின் கேப்களைதான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

குறிப்பாக சென்னை, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் வெகுவாக வளர்ச்சியடைந்து விட்டன. ஆனாலும் கால் டாக்ஸிகளின் டிரைவர்களுக்கு குறைவான கமிஷனை மட்டும் அந்நிறுவனங்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

இதனை கண்டித்து மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்களின் டிரைவர்கள் நேற்று (அக்டோபர் 22) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விரு நகரங்களிலும் நேற்று 50-80 சதவீத கேப்கள் இயங்கவில்லை.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

இதில், மும்பை நகரில் இன்றும் வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. மும்பை நகரில் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட கால் டாக்ஸி டிரைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

இதுகுறித்து கால் டாக்ஸி டிரைவர்கள் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ மீட்டருக்கு 15-20 ரூபாய் வரை சம்பாதித்து வந்தோம். ஆனால் தற்போது ஓலா அல்லது உபேர் என எந்த நிறுவனத்தின் டிரைவர் என்றாலும் ஒரு கிலோ மீட்டருக்கு 4.30 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்ட முடிகிறது.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

டிரைவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையானது, 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 80 சதவீதம் அளவுக்கு சரிந்து விட்டது. இதனால்தான் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர்.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

இதனால் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் ஓலா, உபேர் நிறுவனங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு பாதிப்பை உண்டாக்கியுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்காக உபேர் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

மொத்தமாக வாரி சுருட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. வருவாய் இழந்த ஓலா, உபேர் டிரைவர்கள் ஸ்டிரைக்..

ஆனால் ஓலா நிறுவனம் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்களின் டிரைவர்கள் சிலர் நேற்று வேலை செய்ய விரும்பியதாகவும், ஆனால் யூனியனை சேர்ந்த சிலர் அவர்களை தடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles

ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Ola, Uber Drivers Strike In Mumbai And Delhi. Read in Tamil
Story first published: Tuesday, October 23, 2018, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X