குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

ஓலா, உபேர் நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ரக வாகனமான க்யூட் என்ற குவார்ட்ரிசைக்கிள் வாகனத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

ஓலா, உபேர் நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ரக வாகனமான க்யூட் என்ற குவார்ட்ரிசைக்கிள் வாகனத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த வாகனம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

இந்தியாவில் கால் டாக்ஸி நிறுவனங்களில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனம் ஓலா மற்றும் உபேர் தான். இந்த நிறுவனங்கள் தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி செயல்பட்டு வருவதால் எதிர்பார்த்திராத வளர்ச்சியை பெற்றது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

ஓலா மற்றும் உபேர் தொழிற்நுட்பங்கள் இந்தியர்கள் மத்தியில் கால் டாக்ஸி பயன்பாட்டை அதிகரித்ததுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள வாகனங்களை எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசு முயற்சித்து வருகிறது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

அதே போல் ஓலா உபேர் நிறுவனங்களும் தங்கள் பயன்படுத்து வாகனங்களை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க முடிவு செய்து அதற்கான தீவிரமான நடவடிக்கையில் இரு நிறுவனங்களும் இறங்கியுள்ளது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு இந்தியாவில் குவார்ட்ரிசைக்கிள் ரக வாகனத்தை விற்பனை செய்ய அனுமதியளித்தது. இதையடுத்து பஜாஜ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து வந்த க்யூட் என்ற குவார்ட்ரிசைக்கிள் ரக வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இந்த செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம் அதை படிக்க "இங்கே கிளிக்" செய்யவும்.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

இந்த ரக வாகனத்தை கமர்ஷியல் பயன்பாட்டிற்கு பயன்படுத்த மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது. அதையடுத்து ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் க்யூட்டை வாங்க முன்வந்துள்ளன. பஜாஜ் நிறுவனம் இந்த வாகனத்தை இந்தாண்டு இறுதி அல்லது 2019 ஆண்டின் முற்பாதியில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த குவார்ட்ரிசைக்கிள், குறைந்த விலையிலும் அதே நேரத்தில் பாதுகாப்பானதாகவும், ஆட்டோக்களுக்கு மாற்றாகவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

இந்த வாகனத்தை சொந்த பயன்பாட்டிற்காக யாரும் வாங்க முடியாது. கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமே வாங்க முடிவும். இந்த குவார்ட்ரிசைக்களிலில் டிரைவர் சீட் உட்பட 4 சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

பஜாஜ் நிறுவனம் இந்த க்யூட் குவார்ட்ரிசைக்கிளை 100 சதவீதம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் இதன் விற்பனை துவங்கினாலும் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு இந்த வாகனங்கள் ஏற்றுமதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

இந்த பஜாஜ் க்யூட் குவார்ட்ரிசைக்கிள் 475 கிலோவிற்கும் குறைவான எடையை கொண்டுள்ளது. மேலும் இது இந்தியாவின் சிறிய ரக காரான டாடா நானோவை விட சிறியதாக இருக்கும். இதன் நீளம் 1,312 மிமீ, அகலம் 1,652 மிமீ, உயரம் 1,925மிமீ அளவுகளை கொண்டுள்ளது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

இந்த வாகனம் சிறிய தாக இருப்பதால் இதன் மூலம் குறுகலான ரோட்டில் கூட பயணம் செய்ய முடியும். இந்த க்யூட் குவார்ட்ரி சைக்கிள் இன்ஜினை பொருத்தவரை 216 சிசி 4 ஸ்டோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 13.2 பிஎஸ் பவரையும், 19.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

மேலும் இந்த இன்ஜின் வாட்டர் கூலிங் மற்றும் டுவின் ஸ்பார்க் இக்னீஸியன் சிஸ்ம், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், ரியர் வீல் டிரைவ், ஆகியவற்றை கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குவார்ட்ரிசைக்கிள் எல்பிஜி, சிஎன்ஜி ஆகியவற்றிலும் செயல்படும் திறன் கொண்டது.

குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது

இந்த குவார்ட்டி சைக்கிள் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் ஆட்டோகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஆட்டோவில் பயணிப்பதை போல இந்த வாகனத்திலும் 3 பேர் பயணிக்கலாம். மேலும் இது ஆட்டோவை விட பாதுகாப்பானதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

English summary
Ola & Uber could planing to use quadricycles. Read in Tamil
Story first published: Monday, July 2, 2018, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X