செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 பிகோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. எனவே பிகோ காரின் உற்பத்தியை நிறுத்தி விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 பிகோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. எனவே பிகோ காரின் உற்பத்தியை நிறுத்தி விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு (Ford). இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று பிகோ (Figo). ஆனால் சமீப காலமாக பிகோ கார்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

இதன் உச்சகட்டமாக 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் சேர்த்து வெறும் 5 பிகோ கார்களை மட்டுமே ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதற்கு முன்னதாக வேறு எப்போதும் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் பிகோ கார்கள் விற்பனையானது இல்லை.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

இந்த எண்ணிக்கையானது ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றான மஸ்டங்கை விட குறைவு என்பது மற்றொரு கவனிக்கத்தக்க அம்சமாகும். ஏனெனில் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 12 மஸ்டங் கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

இதனிடையே இந்தியாவில் உள்ள சில ஃபோர்டு நிறுவன டீலர்கள், பிகோ காருக்கு டெலிவரி எடுப்பதை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பிகோ காரின் உற்பத்தியை நிறுத்தி விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

விற்பனை கடுமையான சரிவை சந்தித்து இருப்பதால்தான், தற்போது உள்ள பிகோ காரின் உற்பத்தியை நிறுத்தி விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதனையும் ஃபோர்டு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது புதிய பிகோ காரை 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக மட்டும் ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

புதிய ஃபோர்டு பிகோ காரானது வெளிநாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதனிடையே பிகோ காரின் விற்பனை மட்டுமல்லாது ஃபோர்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு கார்கள் விற்பனையும் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஃபோர்டு நிறுவனமானது உள்நாட்டில் 8,230 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த கால கட்டத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஃபோர்டு நிறுவன கார் என்ற பெருமையை எகோ ஸ்போர்ட் பெறுகிறது.

செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?

2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 3,789 ஃபோர்டு எகோ ஸ்போர்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடங்களை ஃப்ரீஸ்டைல் (2,302) மற்றும் ஆஸ்பயர் (1,640) ஆகியவை பிடித்துள்ளன.

Most Read Articles

2018 ஃபோர்டு எகோ ஸ்போர்ட் எஸ் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஃபோர்டு
English summary
Only 5 Ford Figo Cars are Sold in Sep 2018. Read in Tamil
Story first published: Tuesday, October 9, 2018, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X