ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ 35க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ரூ.80ஐ தாண்டி விற்பனையாகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள 12 நகரங்களல் இன்று பெட்ரோல் விலை ரூ.90ஐ தாண்டிவிட்டது. மக்கள்

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ரூ.80ஐ தாண்டி விற்பனையாகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள 12 நகரங்களில் இன்று பெட்ரோல் விலை ரூ.90ஐ தாண்டிவிட்டது. மக்கள் மத்தியில் தற்போது இதுதான் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த பலர் பல இடங்களில் இருந்து பல்வேறு விதமான யோசனைகளை சொல்லி வருகின்றனர். மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என்று சிலரும், மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என்று சிலரும் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

இதற்கிடையில் கர்நாடக மாநில அரசானது, செஸ் வரியை குறைத்துள்ளது. அதாவது கர்நாடகாவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.2 குறையும் வகையில், வரி குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் இது போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபா ராம்தேவ், பெட்ரோலை தன்னால் ரூ.35க்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

டில்லியில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்த போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது : "பிரதமர் மோடியின் கொள்கையை பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் அவர் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலைவாசி உயர்வு, மோடி அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

அதை 2019 தேர்தலில் மோடி சந்திக்க வேண்டும். அதே நேரத்தில் அவரின் தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்த திட்டம் எதிர்காலத்தில் இந்தியாவை பெருமைப்படுத்தும் ஒரு திட்டமாக மாறும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

மத்திய அரசு ஒத்துழைத்தால், பதஞ்சலி நிறுவனம் மூலம் பெட்ரோலை ஒரு லிட்டர் ரூ.35க்கு விற்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கு மத்திய அரசு சில வரிச்சலுகைகளை வழங்க வேண்டும். அவ்வாறு நடந்தால் நாட்டில் உள்ள அனைவருக்கும் ரூ.35க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கும்.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

தற்போது மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது வரி போடுவதை குறை சொல்கின்றனர். இந்த வரியை நிறுத்தி விட்டால், அரசிடம் உள்ள பணம் குறைந்து காலியாகிவிடும். இதனால் எதிர்காலத்தில் சிறந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்த முடியாது.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

அதே நேரத்தில் பெட்ரோலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். என் விருப்பமும் அதுதான். பெட்ரோல், டீசலை கண்டிப்பாக ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும், அதை கட்டாயம் 28 சதவீதமாக வைக்ககூடாது.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

அந்த வரி விதிப்பு என்பது மிக குறைவான ஒரு வரி விதிப்பு. இதைக்கொண்டு நாட்டின் வருவாயை ஏற்ற முடியாது. எனவே 28 சதவீதத்திற்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டு, அது பெட்ரோல், டீசலுக்கான ஸ்பெஷல் ஸ்லாபாக அமைக்கப்பட வேண்டும்.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

நான் அரசியலை விட்டு விலகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. தற்போது யாருக்கும் எந்த கட்சிக்கு ஆதரவாக நான் செயல்படுவதில்லை. அனைத்து அரசியல் கட்சிகளோடும், அரசியல் கட்சி தலைவர்களோடும் இணைந்தே செயல்படுகிறேன்" என கூறினார்.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

தற்போது ரூ.80க்கு மேல் விற்பனையாகும் பெட்ரோலை, பாபா ராம்தேவ் எவ்வாறு ரூ.35க்கு வழங்குவார் என்பதை பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. மாறாக மத்திய அரசு சிறிது வரிச்சலுகை அளித்தால் அது சாத்தியம் என்று மட்டுமே அவர் கூறியுள்ளார்.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

பாலாவின் பார்வையில்:

இந்தியாவில் பெட்ரோல் மீது மத்திய அரசு லிட்டருக்கு ரூ.19 வரையிலும், மாநில அரசு 32 சதவீதம் வரையிலும் வரியை விதிக்கின்றன. கிட்டத்தட்ட இந்த வரியில் முழு விலக்கு அளித்தால் மட்டுமே ரூ.35க்கு பெட்ரோல் சாத்தியம். ஆனால் அப்படி செய்வதால் அரசு பெரும் அளவில் இழப்புகளை சந்திக்க நேரிடும். அப்படி விலக்கு வழங்குவதாக இருந்தால், அரசு நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்கே இந்த விலக்கை வழங்கி விடலாம்.

ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ35 க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்

மாறாக பதஞ்சலி நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது பாபா ராம் தேவ் கூறியுள்ளதை வெறும் விளம்பர பேச்சாக மட்டுமே பார்க்க முடியும். அவர் உண்மையிலேயே ரூ.35க்கு பெட்ரோல் வழங்கும் திட்டத்தை வைத்திருந்தால், அதை அரசிடம் தெரிவித்து சிறிய அளவில் வரிச்சலுகை பெற்று வழங்கினால் இந்திய மக்கள் அதிக பயன்பெறுவார்கள். ஆனால் இது எல்லாம் நடக்கக்கூடிய விஷயமா என்ன?

Most Read Articles

பெட்ரோல் விலை ரூ.90க்கு விற்றாலும் சரி, ரூ.30க்கு விற்றாலும் சரி, இந்த ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை... அட நம்ம புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டரைதான் சொல்றோங்க... இந்த ஸ்கூட்டரின் புகைப்பட ஆல்பத்தை இங்கே காணுங்கள்...

English summary
Pathanjali ready to give one liter petrol for rs35: Baba Ramdev. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X