ராகுல் காந்தி மட்டுமா? இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...

காங்கிரஸ் இல்லாத இந்தியா சாத்தியமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மீண்டும் அதன் 'கை' ஓங்கியுள்ளது.

காங்கிரஸ் இல்லாத இந்தியா சாத்தியமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மீண்டும் அதன் 'கை' ஓங்கியுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக மண்ணை கவ்வியதற்கு, ராகுல் காந்திதான் முழு முதற்காரணம் என நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. இதற்கு உண்மையான காரணம் இவர்கள்தான்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (டிச.11) வெளியாகியுள்ளன. மக்களாலும், பத்திரிக்கைகளாலும், கிட்டத்தட்ட அரையிறுதி என வர்ணிக்கப்பட்ட தேர்தல் இது.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பப்பு... பப்பு... என கிண்டல் செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவிற்கு சரியான நேரத்தில் பாடம் புகட்டியுள்ளார். காங்கிரஸ் இல்லாத இந்தியா ஒருபோதும் சாத்தியமே அல்ல என்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார்கள்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பாஜகவின் கோட்டையாக திகழ்ந்த சட்டீஸ்கரில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அங்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸிடம், ஆட்சியை இழந்துள்ள முதல்வர் ராமன் சிங் முகத்தை தொங்க போட்டு கொள்வதை தவிர வேறு வழியில்லை.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாஜகவிற்கு செம டஃப் கொடுத்துள்ளது காங்கிரஸ் (கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில், இவ்விரு மாநிலங்களிலும், தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும், அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது).

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

ஒட்டுமொத்தத்தில் ஒருவழியாக மோடி அலை ஓய்ந்து, காங்கிரஸின் 'கை' மீண்டும் ஓங்கியுள்ளது. பாஜக மண்ணை கவ்வியிருப்பதை, மேற்கண்ட மாநில மக்களை காட்டிலும், தமிழகத்தில் உள்ள மக்கள்தான் அதிகம் கொண்டாடி கொண்டிருப்பது போல் தெரிகிறது.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பாஜக தோல்வியை சந்தித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்தந்த மாநிலங்கள் சார்ந்த பிரச்னை, தேர்தலில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. எனவேதான் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் 'ஒரு விரல் புரட்சி' செய்துள்ளனர்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

ஆனால் நாடு முழுக்க நிலவிய பொதுவான சில பிரச்னைகளும் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதில் முதலாவது பிரச்னை, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் வரலாறு காணாத விலை உயர்வு.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்ததற்கு, பிரதமர் நரேந்திர மோடியும், அவர் தலைமையிலான மத்திய பாஜக அரசும்தான் முழு முதற் காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வடைந்த விதம் அதனை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

இந்தியாவில் மாதம் இரு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. இதன்மூலம் சற்றே விலையை உயர்த்தினாலும், மக்கள் மத்தியில் அது பெரும் புயலை கிளப்பிவிடும்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

ஆனால் இந்த முறையை மாற்றி, பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வாரி வழங்கியது சாட்சாத் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 16ம் தேதிதான் அரங்கேறியது அந்த விபரீதம். ஆம், அன்று முதல்தான் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த நடைமுறை அமலுக்கு வந்த முதல் நாளில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது என்னவோ உண்மைதான்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

ஆனால் அதற்கு பிறகு மெல்ல மெல்ல தனது கைங்கரியத்தை காட்டியது மத்திய அரசு. நாள்தோறும் பைசா கணக்கில் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது. பைசா கணக்கில்தானே விலை உயர்கிறது என ஆரம்பத்தில் மக்களும் கூட இதனை ஒன்றும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

அதுதான் மத்திய அரசின் வெற்றி. ஆனால் நாளாக நாளாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சங்களை தொட்டது. அப்போதுதான் விழித்து கொண்டான் சாமானியன். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு எவ்வளவு தந்திரமாக உயர்த்துகிறது என்பது அப்போதுதான் அவனுக்கு புரிந்தது.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என அவன் குரல் கொடுக்க தொடங்கியது அதன்பின்புதான். ஆனால் ஒரு ஏழைத்தாயின் மகன் தலைமையில் செயல்படும், சாமானிய மக்களுக்கான அல்லது அவ்வாறு கூறி கொள்ளும் மத்திய அரசு எதற்கும் செவி சாய்ப்பதாகவே இல்லை.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையைதான் கை விட மாட்டீர்கள். ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல், டீசலை கொண்டு வருவீர்களா? என்று வாகன ஓட்டிகளிடம் இருந்து அடுத்த குரல்கள் ஒலிக்க தொடங்கின. அதற்கும் மத்திய அரசின் பதில் 'நோ நோ' என்பதுதான்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு வரிச்சுமைகளை ஒரு சாமானியன் எவ்வாறு தாங்கி கொள்ள முடியும்? பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்க இதுவே காரணம்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மிக அதிகப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பும் ஒரு முக்கிய காரணம். ஆனால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில் ஒரே ஒரு வரிதான்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

எனவே ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் மத்திய அரசு இன்று வரை அதனை செயல்படுத்தவில்லை. வரிகள் மூலமாக கிடைக்கும் அதிகப்படியான வருவாயை இழந்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணம்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

அல்லது 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இந்த கோரிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு திட்டமிட்டிருக்கலாம். சிறிய மீனை விட்டு விட்டு பெரிய மீனை பிடிக்கும் கொக்கின் கதை உங்களுக்கு நியாபகம் வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

இதற்கு இடையில் நாட்டின் பொருளாதாரம் வேறு அதல பாதாளத்திற்கு சென்றது. குறைய வேண்டிய பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. ஆனால் உயர வேண்டிய இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. என்னே ஒரு முரண்பாடு? பெட்ரோல், டீசல் விலை உயர, இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு காரணம்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

இது போன்ற பல்வேறு காரணங்களின் விளைவாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சங்களை தொட்டது. வரலாற்றில் முதல் முறையாக, பெட்ரோல் விலையை 90 ரூபாயை கடக்க வைத்தது, பிரதமர் மோடி தலைமையிலான ஏழைகளுக்கான அரசின் இமாலய சாதனைகளில் ஒன்று!!

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பெட்ரோலில் ஒரு சாதனையை படைத்து விட்டு, டீசலில் மட்டும் எதுவும் புரியாமல் இருந்தால் எப்படி? இந்திய வரலாற்றில் முதல் முறையாக, பெட்ரோலின் விலையை டீசல் விலை 'ஓவர் டேக்' செய்து சென்ற விபரீதம் நிகழ்ந்ததும், மோடி தலைமையிலான ஏழைகளுக்கான ஆட்சியில்தான்!!

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

இந்த விபரீதம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்தான் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியது. அதெல்லாம் சரி, கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறதே என ஒரு சிலர் வாக்குவாதத்திற்கு வரலாம்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

இது இந்த 5 மாநில தேர்தலுக்காக நடத்தப்பட்ட ஸ்டண்ட் என்பது நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக தேர்தல் சமயத்தில் இது போன்ற ஸ்டண்ட்டை கண் கூடாக பார்க்க முடிந்தது. அதாவது தேர்தலுக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவே இல்லை.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

ஆனால் தேர்தல் முடிந்த உடனே மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர தொடங்கியது. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய, மேற்குறிப்பிட்ட அரிய வரலாற்று நிகழ்வுகள் எல்லாம், இந்த இடைப்பட்ட நாட்களில் அரங்கேறியவைதான்!!

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

சரி தேர்தலுக்காக நடத்தப்பட்ட ஸ்டண்ட் என்றாலும், அதன் முழு பலன் மக்களுக்கு தரப்பட்டதா? என்றாலும், இல்லை என்பதுதான் அதற்கு பதிலாக கிடைக்கிறது. ஆம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

பெட்ரோல், டீசல் விலை மட்டுமா உயர்ந்தது? இல்லை. வாகனங்களின் விலையும் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை போல், இது சாமானிய மக்களுக்கான பிரச்னை இல்லை என்றாலும், வாகனங்களை வாங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய பிரச்னைதான்.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

கடந்த 5, 6 மாத கால அளவில் மஹிந்திரா, ஹோண்டா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளன. நாங்கள் மட்டும் சும்மா இருந்தால் எப்படி? என்கிற ரீதியில் மாருதி சுஸுகி, டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் வரும் ஜனவரி 1 முதல் விலையை உயர்த்த காத்திருக்கின்றன.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

கார்களின் விலை உயர்விற்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இதற்கு மறைமுக காரணம். கார்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல, போக்குவரத்திற்கு அதிக செலவு பிடிக்கிறது என நிறுவனங்கள் கூறுகின்றன.

'ஒரு விரல் புரட்சி' செய்த மக்கள்... 5 மாநில தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ முக்கிய காரணங்கள் இவைதான்...

ஆக மொத்தத்தில் மோடி மற்றும் பாஜகவின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்த்ததில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட சாமானிய வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் பெரும் பங்கு உள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்,இந்த சாமானியன் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறான்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Petrol, Diesel And Vehicle Price Hike: Reasons For BJP's Defeat In 5 State Assembly Election
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X