விமானம் மோதியும் அசங்காத டெஸ்லா கார்... சிறு கீறல் இன்றி பயணிகள் உயிர் தப்பிய அதிசயம்...

சாலையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா காரின் மீது எதிர்பாராத விதமாக விமானம் மோதியது. ஆனால் காரில் பயணித்தவர்களுக்கு சிறு கீறல் கூட விழவில்லை.

சாலையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா காரின் மீது எதிர்பாராத விதமாக விமானம் மோதியது. ஆனால் காரில் பயணித்தவர்களுக்கு சிறு கீறல் கூட விழவில்லை. இந்த ஆச்சரிய சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

அமெரிக்க அரசின் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சொந்தமான செஸ்னா 206 எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்று, டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சுகர் லேண்ட் என்ற நகரில், பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதில், 3 ஏஜென்ட்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே சாலையிலேயே விமானத்தை லேண்ட் செய்து விட பைலட் முடிவு செய்தார். அது சிறிய ரக விமானம்தான் என்பதால், சாலையில் லேண்ட் செய்வதற்கான சாத்தியங்கள் இருந்தன.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

எனவே சாலையிலேயே விமானத்தை லேண்ட் செய்வதற்கான முயற்சியில் பைலட் ஈடுபட்டார். ஆனால் லேண்ட் ஆகும்போது, அங்கு பயணித்து கொண்டிருந்த டெஸ்லா மாடல் எக்ஸ் கார் ஒன்றின் மீது எதிர்பாராத விதமாக விமானம் மோதிவிட்டது.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

சுகர் லேண்ட் நகரை சேர்ந்த ஓனியல் குருப் என்பவர்தான், காரை இயக்கி கொண்டிருந்தவர். இந்த விபத்து நிகழ்ந்தபோது, ஓனியல் குருப்பின் மகன் ஆரவ்வும் காரில்தான் இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்கும் சிறிய அளவிலான காயம் கூட ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம்.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

எனினும் விமானத்தில் பயணித்த ஏஜென்ட் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நடந்த சம்பவங்களை எல்லாம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஓனியல் குருப்தான்பதிவிட்டுள்ளார்.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

இதில், ''விமானம் மோதிவிட்டது என முதலில் நான் தொலைபேசியில் அழைத்து தகவல் சொன்னபோது யாரும் நம்பவே இல்லை. இது பிராங்க் கால் என நினைத்து சிரித்தனர். ஆனால் இந்த விபத்து குறித்த செய்தியை பலர் தற்போதுதான் பார்த்துள்ளனர்.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

இதனால் எனது உடல் நலன் குறித்தும், எனது மகன் ஆரவ்வின் உடல் நலன் குறித்தும் தொலைபேசி மூலம் அழைத்து விசாரித்து கொண்டுள்ளனர். எனவே எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒன்றை சொல்லி கொள்ள நான் விரும்புகிறேன்.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

நானும், எனது மகன் ஆரவ்வும் நலமாக உள்ளோம். கடவுளும், டெஸ்லா மாடல் எக்ஸ் காரும்தான் எங்களை காப்பாற்றியது. எங்கள் மீது சிறு கீறல் கூட விழவில்லை'' என கூறப்பட்டுள்ளது. ஓனியல் குருப், ஆரவ் நலமாக இருப்பது மகிழ்ச்சி என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கும் தெரிவித்துள்ளார்.ஓனியல் குருப் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

டெஸ்லா நிறுவனமானது, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாலோ ஆல்டோ என்ற நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில், டெஸ்லா நிறுவனம்தான் இன்று உலகின் முன்னோடி.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

மாடல் எக்ஸ், மாடல் எஸ், மாடல் 3 உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களில் இடம்பெற்றிருக்கும் சொகுசு வசதிகள் மிகவும் பிரபலம். அத்துடன் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்களில் பாதுகாப்பு வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

விமானம் மோதியும் உயிர் தப்பிய குடும்பமே அதற்கு சாட்சி. பொதுவாக எலெக்ட்ரிக் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் மீது அதிக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதாவது எலெக்ட்ரிக் கார்களின் செயல்திறன் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

ஆனால் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் அதிக செயல்திறன் வாய்ந்தவை. அதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. ஆம், விமானம் ஒன்றை கயிறு கட்டி இழுத்து சென்று, உலக சாதனை படைத்தது டெஸ்லா மாடல் எக்ஸ் கார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

க்வாண்டஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 787-9 டிரீம்லைனர் போயிங் ரக விமானத்தைதான், டெஸ்லா மாடல் எக்ஸ் கார் கயிறு கட்டி இழுத்து சென்றது. ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் உள்ள விமான நிலையத்தில்தான் இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

பொதுவாக பயணிகளுடன் சேர்த்து டேக் ஆப் ஆகும்போது, 787-9 டிரீம்லைனர் போயிங் ரக விமானத்தின் எடை சுமார் 2,54,000 கிலோவாக இருக்கும். ஆனால் டெஸ்லா மாடல் எக்ஸ் கார், அந்த விமானத்தை இழுக்கும்போது, விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

எனவே டெஸ்லா மாடல் எக்ஸ் கார், விமானத்தை இழுத்த நேரத்தில், விமானத்தின் ஒட்டுமொத்த எடையானது 1,30,000 கிலோவாக இருந்தது. ஆனால் 1,30,000 கிலோ என்பதும் சாதாரண விஷயம் அல்ல. பயணிகள் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றால் இழுக்கப்பட்ட அதிகபட்ச எடை இதுதான்.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

இதற்கு முன்பாக வேறு எந்த பயணிகள் எலெக்ட்ரிக் வாகனமும் இவ்வளவு பெரிய எடையை இழுத்ததே இல்லை. எனவேதான் டெஸ்லா மாடல் எக்ஸ் எலெக்ட்ரின் காரின் செயல்திறன், உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

விமானம் மோதியும் சிறு கீறல் இன்றி உயிர் தப்பிய குடும்பம்.. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்படி..

முதலில் டெஸ்லா மாடல் எக்ஸ் காரானது, விமானத்தை இழுத்து தனது செயல்திறனை நிரூபித்தது. தற்போது அந்த காரின் மீது விமானம் மோதியும், காரில் பயணித்தவர்களுக்கு சிறிய கீறல் கூட ஏற்படவில்லை. இதன்மூலம் அந்த காரின் பாதுகாப்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

டெஸ்லா மாடல் எக்ஸ் காரின் புகைப்பட ஆல்பம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 1,30,000 கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்ததும் இந்த கார்தான். விமானம் மோதியும், சிறு கீறல் கூட விழாமல் 2 பேரின் உயிரை காப்பாற்றியதும் இந்த கார்தான்.

English summary
Plane Collided With a Tesla Model X – Owner Escapes Unhurt. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X