பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!

பிஎஸ்ஏ- சிகே பிர்லா கூட்டணி இணைந்து கார்களுக்கான எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உற்பத்திக்கான PSA AVTEC பவர்ட்ரெயின் என்ற பெயரில் புதிய ஆலையை ஓசூரில் அமைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ கார் குழுமம் பீஜோ மற்றும் சிட்ரோவன் பிராண்டுகளில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் மீண்டும் இந்தியாவில் கால் பதிப்பதற்கான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரம் காட்டி வருகிறது.

பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!

மேலும், இந்தியாவில் தனித்து இறங்குவதைவிட, இந்திய நிறுவனத்தின் கூட்டணியுடன் செயல்படுவது சிறந்தது என்று முடிவு செய்தது. அதன்படி, ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சிகே பிர்லா குழுமத்துடன் இணைந்து செயல்பட இருக்கிறது. மேலும், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான அம்பாசடர் காரின் பெயர் உரிமத்தையும் பெற்றுள்ளது பிஎஸ்ஏ குழுமம்.

பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!

இந்த நிலையில், பிஎஸ்ஏ- சிகே பிர்லா கூட்டணி இணைந்து கார்களுக்கான எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உற்பத்திக்கான PSA AVTEC பவர்ட்ரெயின் என்ற பெயரில் புதிய ஆலையை ஓசூரில் அமைத்துள்ளது. இந்த ஆலை திறப்பு விழாவில் பிஎஸ்ஏ குழுமத் தலைவர் கார்லோஸ் தவேர்ஸ் மற்றும் சிகே பிர்லா குழுமத்தின் தலைவர் பிர்லா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!

இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்டுகள் டிரான்ஸ்மிஷன்கள், 2 லட்சம் யூனிட்டுகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான கார் எஞ்சின்களையும் உற்பத்தி செய்ய இயலும். இந்த ஆலை ரூ.600 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு இருக்கிறது. நேரடியாக 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!

இந்த ஆலையிலிருந்து உற்பத்தியாகும் எஞ்சின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் இந்தியாவிற்கான கார் மாடல்களுக்கு மட்டுமின்றி, உலக அளவில் விற்பனை செய்யப்படும் பீஜோ மற்றும் சிட்ரோவன் காகர்களில் பயன்படுத்தப்படும். வெளிநாடுகளில் செயல்படும் பிஎஸ்ஏ குழுமத்தின் கார் ஆலைகளுக்கு, இங்கிருந்து கார் எஞ்சின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்களை ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!

பிஎஸ்ஏ குழுமத்தின் கார்களுக்கான கியர்பாக்ஸ்களை முதல் கட்டமாக இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அதேபோன்று, 2020ல் இந்தியாவில் அமலுக்கு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!

இதன்மூலமாக, பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார்களில் பெரும்பான்மையான உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்தே பெறப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், விலையை சந்தைப்போட்டிக்கு தக்கவாறு சவாலாக நிர்ணயிக்க முடியும்.

பீஜோ - பிர்லா நிறுவனத்தின் கார் எஞ்சின் ஆலை ஓசூரில் திறப்பு!

இந்த நிலையில், அம்பாசடர் காரை மீண்டும் புதிய தலைமுறை மாடலாக பிஎஸ்ஏ குழுமம் அறிமுகம் செய்யும் என்ற தகவலும் இந்திய கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக கருதப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இப்போது இல்லை.

Most Read Articles

புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #பீஜோ
English summary
PSA - CK Birla Group Inaugurates Car Engine Plant In Hosur.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X