ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

ரயிலில் அடிபட்டு 61 பேர் உயிரிழந்த சூழலில், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பயன்பாட்டிற்காக ரூ.80 கோடி மதிப்பில் சுமார் 400 புதிய சொகுசு கார்களை வாங்க பஞ்சாப் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரயிலில் அடிபட்டு 61 பேர் உயிரிழந்த சூழலில், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பயன்பாட்டிற்காக ரூ.80 கோடி மதிப்பில் சுமார் 400 புதிய சொகுசு கார்களை வாங்க பஞ்சாப் அரசு ஒப்புதல் வழங்கியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோதா பதக் என்ற பகுதியில் நேற்று (அக்டோபர் 19) தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. ஜோதா பதக்கில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ள மைதானத்தில்தான் தசரா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

இதில், வழக்கம் போல ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அதனை காண்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே அங்குள்ள ரயில்வே தண்டவாளம் மற்றும் தண்டவாளத்தின் அருகிலும் பலர் நின்று கொண்டிருந்தனர்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

ஜோதா பதக்கில் நடைபெற்ற இந்த கோர சம்பவம் பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாது நாட்டையே உலுக்கியுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

ஜோதா பதக்கில் நடைபெற்ற தசரா விழாவில் பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய அமைச்சரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

ஆனால் ரயில் விபத்து நடைபெற்றபோதும் அவர் தொடர்ந்து உரையாற்றி கொண்டிருந்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே தான் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டதாக நவ்ஜோத் கவுர் தெரிவித்துள்ளார்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜோதா பதக் தசரா விழாவை காங்கிரஸ் கட்சி உரிய அனுமதி பெறாமல் நடத்தியதாகவும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், மறுபுறம் பஞ்சாப் மாநிலமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த சூழலில் பஞ்சாப் மாநில முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பயன்பாட்டிற்காக சுமார் 400 புதிய கார்கள் வாங்கப்பட உள்ளன.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

சுமார் 400 புதிய கார்களை வாங்குவதற்கு பஞ்சாப் மாநில அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை பஞ்சாப் மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

இந்த 400 கார்களில், டொயோட்டா நிறுவனத்தை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser), பார்ச்சூனர் (Fortuner) மற்றும் இன்னோவா கிரிஸ்டா (Innova Crysta) ஆகிய கார்களும் அடக்கம்..

உங்கள் போனில் டெலிகிராம் செயலி இருக்கிறதா? இங்கே கிளிக் செய்யுங்கள்..!

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

இதுதவிர மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி டிசையர், எர்டிகா, ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட கார்களும் வாங்கப்படவுள்ளன. ரயிலில் அடிபட்டு 61 பேர் உயிரிழந்துள்ள சூழலில் வெளியாகியுள்ள இந்த தகவல் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தற்போது மிட்சுபிஷி மான்டிரோ எஸ்யூவி (Mitsubishi Montero SUV) காரை பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் புல்லட் புரூஃப் (Bullet Proof) வசதி செய்யப்பட்டுள்ளது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

ஆனால் இனிமேல் புதிதாக வாங்கப்படவுள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரைதான் கேப்டன் அமரிந்தர் சிங் பயன்படுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் அமரிந்தர் சிங் பயன்படுத்தவுள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரிலும் பிரத்யேகமாக புல்லட் புரூஃப் வசதி செய்யப்படவுள்ளது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரின் ரெகுலர் வெர்ஷனின் விலையே மிகவும் அதிகம். இதன் ஆன் ரோடு விலை சுமார் 1.60 கோடி ரூபாய். எனவே புல்லட் புரூஃப் வசதி செய்யப்படும்போது இதன் விலை ரெகுலர் வெர்ஷனை காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும் என கூறப்படுகிறது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

நிலைமை இப்படி இருக்கையில் ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தம் 16 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார்கள் வாங்கப்படவுள்ளன. இதில், 2 கார்களில் புல்லட் புரூஃப் வசதி செய்யப்படும்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

அதே சமயம் பஞ்சாப் மாநில அரசு வாங்க முடிவு செய்துள்ள டொயோட்டா பார்ச்சூனர் கார்களின் விலை ரூ.27.23 லட்சத்தில் இருந்துதான் தொடங்குகிறது. மறுபக்கம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்களின் ஆரம்ப விலையே 14.65 லட்ச ரூபாய்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு வருகையில் விலை மேலும் அதிகரிக்கும். அத்துடன் இவை அடிப்படை வேரியண்ட்களுடைய விலை மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது. டாப் எண்ட் வேரியண்ட்கள் தேர்வு செய்யப்பட்டால் செலவு இன்னும் அதிகரிக்கும்.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மொத்தம் 17 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கு டொயோட்டா பார்ச்சூனர் கார்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களுக்கு டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

அத்துடன் பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் பயன்பாட்டிற்காக 13 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் வாங்கப்படவுள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் அடிப்படை வேரியண்ட்டினுடைய எக்ஸ் ஷோரூம் விலையே 10 லட்ச ரூபாயில் இருந்துதான் தொடங்குகிறது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

இதுதவிர மாருதி டிசையர், எர்டிகா, ஹோண்டா அமேஸ் கார்களும் வாங்கப்படவுள்ளன. ஆக மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 400 கார்களை பஞ்சாப் மாநில அரசு வாங்கவுள்ளது.

ரயில் மோதி 61 பேர் பலியான சூழலில் பஞ்சாப் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு 80 கோடியில் புது சொகுசு கார்

பஞ்சாப் மாநிலம் 1,95,978 கோடி ரூபாய் கடனில் தத்தளித்து கொண்டிருப்பதாக, பட்ஜெட் தாக்கலின்போது, அம்மாநில நிதி அமைச்சரே தெரிவித்தார். இந்த சூழலில் சொகுசு கார்களுக்காக 80 கோடி ரூபாயை அம்மாநில அரசு செலவிடுவதும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

Most Read Articles
English summary
Punjab Govt Decided To Buy Over 400 New Cars Worth Rs.80 Crore For CM, Ministers And MLAs. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X