அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவின் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி மற்றும் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடல்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன.

By Saravana Rajan

சக்திவாய்ந்த ரேஞ்ச்ரோவர் எஸ்விஆர் மாடல்களுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவின் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி மற்றும் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடல்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதன் ஒருபகுதியாக இந்த இரு மாடல்களுக்கும் இந்தியாவில் முன்பதிவு ஏற்கப்படுவதாக லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

ஸ்பெஷல் வெஹிக்கிள் ஆபரேஷன்(SVO))என்று குறிப்பிடப்படும் ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனங்களின் சிறப்பு வாகனங்கள் வடிவமைப்புப் பிரிவு சாதாரண ரேஞ்ச்ரோவர் மாடல்களில் அடிப்படையில் இந்த சக்திவாய்ந்த மாடல்களை உருவாக்கி இருக்கிறது.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

ரேஞ்ச்ரோவர் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி மாடல் டைனமிக் மற்றும் Long Wheel Base(LWB) என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டைனமிக் மாடல் 2.92 மீட்டர் வீல் பேஸும், LWB வேரியண்ட் 3.12 மீட்டர் வீலே பேஸும் கொண்டதாக இருக்கும். இதனால், உட்புறத்தில் மிக மிக தாராள இடவசதியை அளிக்கும்.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய அட்லஸ் க்ரில் அமைப்பபு, பகல்நேர விளக்குகள், புதிய பாடி லைன்களுடன் பொலிவு கூட்டப்பட்டு இருக்கிறது. கார்பன் ஃபைபர் பானட், அகலமான ஏர்டேம்கள் மற்றும் புதிய பம்பர் அமைப்புகள் இதன் முக்கிய அம்சங்கள். எஸ்விஆர் பெர்ஃபார்மென்ஸ் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

மேம்படுத்தப்பட்ட புதிய சேஸீ, ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் புகைப்போக்கி அமைப்பு ஆகியவையும் முக்கியமானவை. சாதாரண ரேஞ்ச்ரோவர் மாடலைவிட இதன் கிரவுண்ட் கிளிரயன்ஸ் 8 மிமீ குறைவானதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 21 அங்குல அலாய் சக்கரங்கள் பிரம்மாண்டத்தை கூட்டுகிறது. பின்புறத்தில் நான்கு புகைப்போக்கி குழாய்களுடன் மிரட்டுகிறது.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த சூப்பர் எஸ்யூவியில் நவீன டச் புரோ டூவோ என்ற தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. பொழுதுபோக்கு மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளை இதன் 10 அங்குல தொடுதிரை மூலமாக இயக்க முடியும். மசாஜ் இருக்கைகள், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட கூடுதல் சொகுசு வசதிகளும் உள்ளன.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த எஸ்யூவி மாடல்களில் முக்கிய விஷயம், இதன் எஞ்சின்தான். ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் எஸ்யூவியில் அதிசக்திவாய்ந்த 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 575 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

இதே எஞ்சின்தான் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோகிராஃபி டைனமிக் வேரியண்ட்டிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், LWB மாடலானது இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேற்கண்ட 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, 4.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கும். இந்த எஞ்சின் 340 பிஎச்பி பவரையும், 740 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அனைத்திலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதிசக்திவாய்ந்த புதிய ரேஞ்ச்ரோவர் மாடல்களுக்கு முன்பதிவு துவங்கியது!

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர்ர மாடலுக்கு ரூ.1.97 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எஸ்விஆட்டோபயோகிராஃபி டைனமிக் மாடலுக்கு ரூ.3.11 கோடி எக்ஸ்ஷோரூம் விலையும், LWB மாடலுக்கு ரூ.3.88 கோடி எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Range Rover SVAutobiography Sport SVR Booking Open: Land Rover has officially started accepting bookings for their latest and most powerful Range Rover range – the Sport SVR and the SVAutobiography. The SVAutobiography will be available in two variants: Dynamic & LWB.
Story first published: Wednesday, June 20, 2018, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X