முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!

பட்ஜெட் விலையில் புதிய எம்பிவி கார் மாடலை ரெனோ கார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டிற்காக உருவாக்கி இருக்கிறது. முதல்முறையாக இந்த கார் கேமரா கண்களில் சிக்கி இருக்கிறது.

By Saravana Rajan

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டின் பிளாக்பஸ்டர் மாடலாக வலம் வரும் க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எம்பிவி காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!

இந்த கார் முழுவதுமாக அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. க்விட் காரின் சற்று கூடுதல் நீளம் கொண்ட மாடலைப் போன்று தோற்றமளிக்கிறது.

முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!

இதனால், இந்த கார் 7 சீட்டர் மாடலாக வருவது உறுதியாக தெரிகிறது. தற்போது விற்பனையில் உள்ள லாட்ஜி எம்பிவி காரைவிட விலை குறைவான எம்பிவி மாடலாக இதனை ரெனோ கார் நிறுவனம் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!

ரெனோ ஆர்பிசி என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் முதலில் பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், அதிக சக்தியையும், டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!

பின்னர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்வதற்கான திட்டம் ரெனோ வசம் உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!

க்விட் காரில் இருப்பது போல ஆர்பிசி எம்பிவி காரின் விலை உயர்ந்த மாடலில் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இடம்பெறும்.

முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!

அடுத்த ஆண்டு முதல் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் அமலுக்கு வர இருப்பதால் சிறப்பான பாதுபாப்பு அம்சங்களுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்படும். ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சங்களாக இடம்பெறும்.

முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்!!

ரூ.6 லட்சம் விலையில் டட்சன் கோ ப்ளஸ் காருக்கு நிகரான ரகத்தில் மினி எம்பிவி கார் மாடலாக விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய எம்பிவி காரை ரெனோ கார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: HVKForum

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault KWID based RBC MPV SPIED testing for the first time in India.
Story first published: Thursday, June 14, 2018, 11:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X