ரெனால்ட் இன்ஜினியர்கள் சீனாவுக்கு ரகசிய விசிட்.. மாருதி, மஹிந்திராவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..

க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ரெனால்ட் நிறுவன இன்ஜினியர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளனர்.

By Arun

க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ரெனால்ட் நிறுவன இன்ஜினியர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளனர். இதனால் மாருதி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

பிரான்ஸ் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எது? ஈபிள் டவர், பிரெஞ்ச் கிஸ், பிரான்ஸ் கால்பந்து அணி என ஒவ்வொருவரிடம் இருந்தும் வெவ்வேறு வித்தியாசமான பதில்கள் வரும். இதே கேள்வியை, இந்தியாவில் உள்ள கார் ஆர்வலர்களிடம் கேட்டு பாருங்கள்.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

நிச்சயமாக அவர்களின் பதில், ரெனால்ட், புகாட்டி என்பதாகதான் இருக்கும். ஏனெனில் இவ்விரு முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவை. இதிலும் புகாட்டி கூட, விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களைதான் அதிகம் உற்பத்தி செய்து வருகிறது.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

எனவே சீப் அண்ட் பெஸ்ட் ஆக காரை எதிர்பார்க்கும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் நிறைந்த இந்திய மார்க்கெட்டில், மிகவும் பிரபலமான நிறுவனம் என்றால், ரெனால்ட்டையே குறிப்பிடலாம். ரெனால்ட் நிறுவனத்திற்கு இப்படி ஒரு அந்தஸ்து கிடைக்க, ஒரு கார் முக்கிய காரணமாக திகழ்கிறது.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

க்விட்தான் அந்த கார். இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது க்விட் கார். சிறிய கார் செக்மெண்டில், மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் வழங்கும் கடுமையான போட்டியை, க்விட் காரை வைத்துதான் சமாளித்து வருகிறது ரெனால்ட்.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

இந்த சூழலில் க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை களத்தில் இறக்கி விட திட்டமிட்டுள்ளது ரெனால்ட் நிறுவனம். எனவே அடுத்த சில ஆண்டுகளில், ரெனால்ட் க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷன் லான்ச் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

அனேகமாக அது 2020 ஆகதான் இருக்கும் என ரெனால்ட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் மாருதி சுஸூகி நிறுவனம், தனது முதல் எலக்ட்ரிக் காரை (எலக்ட்ரிக் வேகன் ஆர்), வரும் 2020ம் ஆண்டில்தான், இந்திய மார்க்கெட்டில் களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

எனவே க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை வைத்து, மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு கவுன்டர் அட்டாக் கொடுக்க துடிக்கிறது ரெனால்ட். இதுதவிர மஹிந்திரா இ2ஓ (Mahindra E2O) மற்றும் விரைவில் லான்ச் செய்யப்படவுள்ள டாடா டியாகோ எலக்ட்ரிக் உள்ளிட்ட கார்களுடனும், இது போட்டியிடும்.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை லான்ச் செய்ய ரெனால்ட் நிறுவனம் ரகசியமாக திட்டமிட்டு வரும் தகவல்கள் தற்போதுதான் கசிந்துள்ளன. முன்னதாக இந்தியாவில் க்விட் காரை உருவாக்கிய இன்ஜினியர்கள் குழு சீனாவுக்கு விசிட் அடித்து விட்டு வந்துள்ளது.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

ஏனெனில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் சீனாதான் கொடி கட்டி பறக்கிறது. எனவே க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என்பதால்தான், ரெனால்ட் நிறுவன இன்ஜினியர்கள் குழு சீன தேசத்திற்கு சென்று வந்துள்ளது.

சீனாவுக்கு ரகசியமாக படையெடுத்த ரெனால்ட் இன்ஜினியர்கள்..

தற்போதைய நிலையில் இந்தியாவில் கிடைக்கும் மலிவான விலை கார்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் திகழ்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2.67 லட்சம் முதல் 4.60 லட்சம் வரை மட்டுமே. எனினும் இதன் எலக்ட்ரிக் வெர்ஷனின் விலை தோராயமாக 6 லட்ச ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ரெனால்ட் இன்ஜினியர்கள் சீனாவுக்கு ரகசிய விசிட்.. மாருதி, மஹிந்திராவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..

அடுத்த 12-15 மாதங்களில், க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷன் சீனாவில் லான்ச் செய்யப்பட்டு விடும் என தெரிகிறது. அதன்பின் உடனடியாக இந்திய மார்க்கெட்டிற்கும், க்விட் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை கொண்டு வர ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Plans to Launch Electric Version of Kwid by 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X