இந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

By Azhagar

இந்தியாவில் 8வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் ரூ. 9.50 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியன்ட் காருக்கு ரூ. 11.35 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் உலகளவில் பிரபலமான மாடல் என்றால் அது பான்டம் தான். தற்போது இதன் 8வது தலைமுறை மாடலான 2018 பான்டம் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

6.75 லிட்டர் ட்வின்-டர்போ வி12 எஞ்சின் பெற்ற இந்த செடான் கார் 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

8 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் இசட்.எஃப் ஜிபிஎஸ் ரிசீவர் உள்ளது. இது கார் இருக்கும் இடத்தையும் வேககட்டுப்பாட்டையும் துள்ளியமாக காட்டும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

துவக்க நிலையிலிருந்து 100கி.மீ வேகத்தை 5.3 விநாடிகளில் எட்டிபிடிக்கும் இந்த கார் மணிக்கு அதிகப்பட்சமாக 250 கி.மீ வேகத்தில் செல்லும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

முற்றிலும் புதிய அலுமினியம் ஸ்பேஸ்ஃபிரேம் சேஸிஸில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கார், 'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' என்ற பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது.

Recommended Video - Watch Now!
New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த புதிய பிளாட்ஃபாரமின் கீழ் அடுத்ததாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி காரான கல்லினன் மாடலும் தயாரிக்கப்படவுள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' என்ற பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளதால், முந்தைய பான்டம் கார்களை விட 30 சதவீதம் வலிமை, உறுதி மற்றும் இலகுத்தன்மை ஆகியவற்றை இந்த புதிய தலைமுறை கார் அதிகமாக பெற்றிருக்கும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

5762 மிமீ நீளம், 2018 மிமீ அகலம், 1646 மிமீ உயரம் மற்றும் 3552 மிமீ லாங் வீல்பேஸ் அளவீடுகளில் 8வது ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் தயாராகியுள்ளது.இதே மாடலில் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட வேரியன்ட் 3772 மிமீ வீல் பேஸில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் புதிய பான்டம் காரின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியன்ட் 1656 மிமீ உயரம் கொண்டுள்ளது. இது சராசரி பான்டம் மாடலை விட 10 மிமீ அதிக உயரம்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

தற்போதைய கார்களின் ஆடம்பர தேவைகளை விட கூடுதலான பல அம்சங்கள் இந்த காரில் உள்ளன. 2018 பான்டம் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பிரத்யேக தேவைகளையும் ரோல்ஸ் ராய்ஸ் இந்த மாடலில் தயாரித்து வழங்கும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

பீ-ஸ்போக் ஆர்கிடெக்ச்சரில் தயாராகியுள்ளதன் காரணமாக கம்போர்ட், மற்றும் சொகுசான பயணத்தை இது வழங்கும். தவிர காரின் உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

2018 பான்டம் காரில் பல உயர் ரக தொழில்நுட்பங்களை பெற்ற 12.3 இஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இதன்மூலம் முன்னர் இருந்த பின்னாகில் இன்ஃபொடெயின்மென்ட் டிஸ்பிளேவிற்கு ரோல்ஸ் ராய்ஸ் விடைக்கொடுத்துள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய பான்டம் கார் டாஷ்போர்டில் பெரிய கிளாஸ் பேனல் ஒன்று உள்ளது. இதை 'கேலரி' என்று குறிக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். மூன்று பரிமாணங்களை கொண்ட இந்த அமைப்பு உரிமையாளரின் பிரத்யேக தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை, 2018 பட்ஜெட் ஆகிய செயல்பாடுகளுக்கு பிறகு தற்போது ரோல்ஸ் ராய்ஸ் 2018 பான்டம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
Read in Tamil: Rolls Royce Phantom VIII Launched In India; Prices Start At Rs 9.50 Crore. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X