டீலர்கள் பகல் கொள்ளை.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

4.45 கோடி ரூபாய் மதிப்பிலான பென்ட்லீ பென்டைகா கார் ஒன்று, பழுது நீக்குவதற்காக, சாலையோர மெக்கானிக் ஷாப்பிற்கு வந்த அதிசயம் அரங்கேறியுள்ளது.

4.45 கோடி ரூபாய் மதிப்பிலான பென்ட்லீ பென்டைகா கார் ஒன்று, பழுது நீக்குவதற்காக, சாலையோர மெக்கானிக் ஷாப்பிற்கு வந்த அதிசயம் அரங்கேறியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களில் ஒன்று பென்ட்லீ பென்டைகா. பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரின் ஆரம்ப விலையை கேட்டாலே, ஒரு நிமிடம் தலை சுற்றிப்போவது நிச்சயம். ஆம், இந்த காரின் விலை 3.85 கோடி ரூபாயில் இருந்துதான் தொடங்குகிறது.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலைதான். ஆன் ரோடு அடிப்படையில் பார்த்தால், பென்ட்லீ பென்டைகா காரின் ஆரம்ப விலை சுமார் 4.45 கோடி ரூபாய். இதுபோன்ற விலை உயர்ந்த லக்ஸரி கார்கள் எல்லாம் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மையங்களில்தான் சர்வீஸ் செய்யப்படும்.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

ஏனெனில் பெரும்பாலான லக்ஸரி கார்களின் உரிமையாளர்கள் அதிகம் விரும்புவது, அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களைதான். ஏனெனில் சாதாரண மெக்கானிக்குகள் வசம் காரை கொடுத்தால், ரிஸ்க் அதிகம் என லக்ஸரி கார்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

எனவே சாதாரண மெக்கானிக்குகளை அவர்கள் ஏறெடுத்து பார்ப்பது கூட கிடையாது. சாதாரண மெக்கானிக்குகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காததால், பென்ட்லீ பென்டைகா போன்ற ஒரு கார், சாதாரண மெக்கானிக் ஷாப்பிற்கு வரும் என கனவில் கூட யாரும் நினைத்து பார்க்க முடியாது.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி, ஒரு பென்ட்லீ பென்டைகா கார், சாதாரண மெக்கானிக் ஷாப்பிற்கு வந்த அதிசயம் நடைபெற்றுள்ளது. உண்மைதான். வெள்ளை நிற பென்ட்லீ பென்டைகா கார் ஒன்று, சாலையோர மெக்கானிக் ஷாப் முன்பாக நிற்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

ஆட்டோமொபைலி ஆர்டண்ட்தான் முதலில் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. ஆட்டோமொபைலி ஆர்டண்ட் என்பது, சூப்பர் கார்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் பிரபலமான பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஹேண்டில் ஆகும்.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

பென்ட்லீ பென்டைகா கார், சாதாரண மெக்கானிக் ஷாப்பிற்கு வந்த அதிசயம் அரங்கேறியிருப்பது எங்கு தெரியுமா? இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

எனினும் திடீரென பிரேக் டவுன் ஆனதால், வேறு வழியில்லாமல், சாலையோர மெக்கானிக் ஷாப்பிற்கு சென்றிருக்கலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால் பெரும்பாலான கார் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு Roadside Assistance எனப்படும் சேவையை வழங்கி வருகின்றன.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

எனவே பிரேக் டவுன் என கார் நிறுவனங்களை அழைத்திருந்தால், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் இருந்து, உடனடியாக மெக்கானிக்குகள் வந்திருப்பார்களே? அது மட்டும் இல்லாமல், இந்த பென்ட்லீ பென்டைகா காரில் இருந்து ப்யூயல் ஃபில்லர் கேப் மற்றும் க்ரில் ஆகியவை கழற்றப்பட்டிருந்தது.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

இதை எல்லாம் வைத்து பார்க்கையில், அந்த பென்ட்லீ பென்டைகா காரின் உரிமையாளர், பிரேக் டவுன் என்பதற்காக மட்டும், சாதாரண மெக்கானிக் ஷாப்பிற்கு வரவில்லை என தெரிகிறது. சம்பந்தப்பட்ட மெக்கானிக் மீதான நம்பிக்கையின் காரணமாகவும், அந்த காரின் உரிமையாளர் அங்கு சென்றிருக்கலாம்.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

ஆனால் இவை எல்லாம் யூகங்கள்தான். என்ன நடந்தது? என்பதற்கான உறுதியான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அத்துடன் இது பென்டைகா காரின் எந்த வேரியண்ட் என்பதையும் உறுதி செய்ய முடியவில்லை.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

ஏனெனில் பென்ட்லீ நிறுவனமானது, வி8 டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (V8 Turbocharged Petrol Engine), டபிள்யூ12 டர்போர்சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (W12 Turbocharged Petrol Engine) என பென்டைகா காரின் 2 வேரியண்ட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

இதில், வி8 டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக, 542 பிஎச்பி பவர் மற்றும் 770 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. அதே நேரத்தில் டபிள்யூ12 டர்போர்சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக, 600 பிஎச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்கி சீறிப்பாயும் வல்லமை மிக்கது.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

வி8 டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்டின் டெல்லி ஆன்ரோடு விலை சுமார் 4.45 கோடி ரூபாய். டபிள்யூ12 டர்போர்சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்டின் டெல்லி ஆன்ரோடு விலை சுமார் 5.06 கோடி ரூபாய்.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

ஆனால் இதில் எந்த வேரியண்ட், மும்பையில் உள்ள சாதாரண மெக்கானிக் ஷாப்பிற்கு வந்தது என்பது தெரியவில்லை. எனினும் இந்த 2 வேரியண்ட்களில் ஒன்றுதான் அங்கு வந்துள்ளது. எனவே குறைந்தபட்சம் 4.45 கோடி ரூபாய் மதிப்புடைய கார், ஒரு சாதாரண மெக்கானிக் ஷாப்பிற்கு வந்தது என்பது மட்டும் உறுதி.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

பொதுவாக மலிவான விலையில் கார்களை வைத்திருப்பவர்கள் மட்டும்தான், இலவச சர்வீஸ் காலம் முடிந்தவுடன், சாலையோரங்களில் மெக்கானிக் ஷாப் நடத்தி வருபவர்களிடம் தங்கள் கார்களை விடுவார்கள். குறிப்பாக செகண்ட் ஹேண்ட் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள்.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

ஏனெனில் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களுக்கு பதிலாக, சாதாரண மெக்கானிக்குகளிடம் கார்களை விடுவதன் மூலமாக பல்வேறு பயன்கள் கிடைக்கிறது. முதலாவது காரணம், செலவு குறைவு. இரண்டாவது காரணம், சம்பந்தப்பட்ட மெக்கானிக் மீது தனிப்பட்ட முறையில் இருக்கும் நம்பிக்கை.

கொள்ளையடிக்கும் டீலர்கள்.. சாதாரண மெக்கானிக்கை நம்பி ரூ.4.45 கோடி மதிப்பிலான காரை விட்ட உரிமையாளர்

ஆனால் இவை எல்லாம் சாதாரண கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள்தான் செய்து வருகின்றனர். லக்ஸரி கார் உரிமையாளர்கள், சாலையோர மெக்கானிக் ஷாப்பிற்கு வருவது அரிதிலும் அரிதான ஒரு விஷயம்.

Most Read Articles

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களில் ஒன்றான பென்ட்லீ பென்டைகா காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #பென்ட்லீ
English summary
Rs 4.45 Crore Worth Bentley Bentayga Spotted Roadside Garage in Mumbai. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X