கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை கொட்டும் மழையில் நடுரோட்டில் இறக்கிவிட்ட ஓலா டிரைவர்

By Bala

பெங்களூருவில் கைகுழந்தையுடன் ஓலா கேப்பில் சென்ற தம்பதியை கொட்டும் மழையில் நடுரோட்டில் இறக்கிவிட்டு அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஓலா நிறுவனத்தின் கேப் டிரைவர் ஒருவர். இதனால் சுமார் 2 மணி நேரம் கணவனும் மனைவியும் நடுரோட்டில் கொட்டும் மழையில் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இச்சம்வம் குறித்து விவரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

இந்தியாவில் சமீபகாலமாக செல்போன் ஆப் மூலம் கேப்களை புக் செய்து பணிக்கும் வகையிலான தொழில்கள் அதிகமாகி விட்டன. இந்தியாவை பொறுத்தவரை ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் இந்த வகை பிஸ்னஸில் கொடிகட்டி பறக்கின்றன.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெரு நகரங்களில் எல்லாம் இவர்கள் சேவை இருக்கிறது. தற்போது சிறு சிறு நகரங்களுக்கும் தங்களது சேவைகளை விரிவடைய செய்து வருகின்றனர்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

இது போன்ற ஆப்கள் மூலம் கார்களை புக் செய்து செல்வது சுலபமாகவும், வசதியாகவும் இருப்பதால், மக்கள் பலர் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த ஆப்பை பயன்படுத்தும் பலருக்கு பல விபரீதமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு கேப்பில் செல்லும் போது பாதுகாப்பு இன்மை அதிகரித்து வருகிறது.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

அந்த வகையில் பெங்களூருவில் சமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் ஓலா கேப் டிரைவர் தனது கேப்பில், இரண்டு குழந்தைகளுடன் வந்த ஒரு குடும்பத்தை கொட்டும் மழையில் லக்கேஜ் உடன் நடுவழியில் இறக்கிவிட்டு கொடூரமாக நடந்து கொண்டுள்ளார்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

இது குறித்து நிகிதா பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலின் படி, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சச்சின் குரானா என்பவர் தனது மனைவி நிகிதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓலா கேப்பில் பயணித்துள்ளார்.

MOST READ: 2019 வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

கேப்பில் ஏறிய சில நிமிடங்களிலேயே டிரைவர் அவரது செல்போன் டேட்டாவை அனைத்து விட்டு மேப் காட்டும் வழியில் செல்லாமல் வேறு வழியாக பயணிக்க துவங்கி விட்டார். அதை உணர்ந்ததும் சச்சினும் அவரது மனைவியும் இது தவறான வழி என்றும், நீங்கள் வேறு பாதையில் செல்கிறீர்கள் என்றும் கூறினர்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

ஆனால் அதை மதிக்காத டிரைவர், ஏர்போர்ட்டில் இருந்து செல்ல இது ஒன்றுதான் வழி என்று அவர்களிடம் சொல்லிவிட்டு தொடர்ந்து அந்த பாதை வழியாகவே பயணிக்க ஆரம்பித்தார். அந்த ரோடு யாரும் இல்லாத ரோடாக இருந்ததால் அந்த டிரைவரிடம் வாக்குவாதம் செய்ய, சச்சின் மற்றும் அவரது மனைவி விரும்பவில்லை.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

மேலும் அந்த ரோட்டில் பயணிக்கும்போது அந்த டிரைவர் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சச்சின் அவரது குழந்தைக்கு டயப்பர் மாற்ற வேண்டும் சற்று காரை நிறுத்துங்கள் என கூறியுள்ளார். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து காரை செலுத்தி கொண்ட இருந்துள்ளார்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

பின்னர் அவர்கள் மீண்டும் ஒரு முறை காரை நிறுத்துமாறு கோரியபோது டிரைவர் கோபமாக அவர்களிடம் கத்தியுள்ளார். இதையடுத்து அந்த தம்பதியினர் அமைதியாகினர். அவர்கள் குழந்தைகளுடன் இருந்ததால் டிரைவருடன் வாக்குவாதம் செய்து பிரச்னையை பெரிதுபடுத்த விரும்பவில்லை.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

எனினும் நிகிதா தனது கைக்குழந்தையின் டயப்பரை மாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்ததால் அவர் மீண்டும் அந்த டிரைவரிடம் உங்களால் எப்பொழுது முடியுமோ அப்பொழுது காரை நிறுத்துங்கள். நாங்கள் அப்பொழுது டயப்பரை மாற்றிக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

MOST READ: அதிருப்தியில் உள்ள உரிமையாளர்களிடம் இருந்து பைக்குகளை திரும்ப பெற ராயல் என்பீல்டு திடீர் முடிவு?

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

உடனடியாக டிரைவர் காரின் ஏசியை ஆஃப் செய்து விட்டு காரை தொடர்ந்து ஓட்டி கொண்டே இருந்துள்ளார். மீண்டும் நிகிதா ஏசியை ஆன் செய்யுங்கள் என கோரியுள்ளார். அதற்கு மீண்டும் கோபமடைந்த ஓலா கேப் டிரைவர் காரை ஓரமாக நிறுத்தி அவர்களை இறங்க சொல்லியுள்ளார். மேலும் காரில் இருந்து அவர்களது பொருட்களை எடுத்து வெளியே வீச முயற்சித்துள்ளார்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

சூழ்நிலையை உணர்ந்த நிகிதா உடனடியாக அருகில் இருந்த டிராபிக் போலீசின் உதவியை நாடியுள்ளார். அதே நேரத்தில் சச்சின், லக்கேஜை எடுத்து கீழே வீச விடாமல் டிரைவரை தடுத்து கொண்டிருந்தார். இந்த தகராறில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

இந்த சம்பவம் முழுவதும் 3 டிராபிக் போலீஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. இதையடுத்து அப்பகுதியில் கூட்டம் கூட துவங்கியது. இதையடுத்து டிராபிக் போலீசார் என்ன நடந்தது? என்று விசாரித்தனர். அப்போது டிரைவரும், டிராபிக் போலீசாரும் கன்னடத்தில் பேச துவங்கியுள்ளனர். ஆனால் சச்சின் மற்றும் நிகிதாவிற்கு கன்னடம் தெரியாது. இந்த சம்பவத்தை பார்த்ததும் அந்த தம்பதியின் 5 வயது மகன் மற்றும் கைக்குழந்தையும் அழத்துவங்கினர்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

அந்த நேரம் பார்க்க மழையும் கொட்ட துவங்கியது. பொதுமக்கள் எல்லாம் களைய துவங்கினர். ஆனால் கேப் டிரைவர் மற்றும் சச்சின் இடையே போலீசார் முன்னிலையில் வாக்குவதாம் தொடர்ந்துள்ளது. அப்பொழுது ஓலா கேப் டிரைவர் "நான் யூனியன்காரன். எனது யூனியன் ஆட்கள் உன்னையும், உனது குடும்பத்தாரையும் உண்டு இல்லை என செய்து விடுவார்கள்" என எச்சரித்துள்ளார்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

இதனால் உடனடியாக அப்பகுதியில் இருந்து சச்சின் மற்றும் அவரது மனைவி நிகிதா ஆகியோர் நகர்ந்தனர். பின்னர் மழையில் நனையாமல் ஒரு பகுதிக்கு சென்று நிகிதாவையும், குழந்தைகளையும் நிறுத்தி விட்டு, சச்சின் போலீசில் புகார் கொடுக்க சென்றார்.

MOST READ: ஒத்தை ஆளாக கெத்து காட்டும் ஆக்டிவா.. ஒரு ஸ்கூட்டரை வீழ்த்த முடியாமல் திணறும் ஹீரோ, பஜாஜ், டிவிஎஸ்

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

முழு சம்பவத்தையும் விசாரித்த போலீஸ், உங்களுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையேயான பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது. இருந்தாலும் அந்த டிரைவர் உங்களை தகாத வார்த்தைகளால் பேசியதாலும், தாக்கியதாலும் புகார் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம் என சொல்லியுள்ளனர். இதையடுத்து அவர்கள் புகாரை பதிவு செய்தனர்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து ஓலா நிறுவனத்திடம் புகார் செய்ய அவர்களது தொடர்பு எண்னை தேடியுள்ளார் நிகிதா. ஆனால் ஓலா நிறுவனம் அதை எளிதாக காணும் வகையில் வைக்கவில்லை. ஏதோ வகையில் கஷ்டப்பட்டு ஓலாவின் சர்வீஸ் சென்டர் நம்பரை எடுத்த நிகிதா, அவர்களிடம் தங்களின் நிலைமையை விவரித்துள்ளார்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

மேலும் தாங்கள் தற்போது வீட்டிற்கு செல்ல கேப் ஒன்றை முதலில் புக் செய்யுங்கள் என நிகிதா கோரிக்கை விடுத்துள்ளார். அதை புக் செய்ய நீங்கள் எவ்வாறு பணம் செலுத்துகிறீர்கள்? பணமாக செலுத்துகிறீர்களா? அல்லது ஓலா மணி மூலம் பணம் செலுத்துகிறீர்களா? என கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் டென்ஷன் ஆனார் நிகிதா.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

இந்த சம்பவம் எல்லாம் நடந்து முடிய சுமார் 2.5 மணி நேரம் ஆகியுள்ளது. அதுவரை அந்த தம்பதியின் இரண்டு குழந்தைகளும் பசியாலும், பதற்றத்தாலும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தனர். இந்த தகவலை நிகிதாவே கூறியிருந்தார்.

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

மேலும் நிகிதா ஓலா நிறுவனத்திடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்

1. ஓலா ஆப்பில் எளிதாக வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரியையோ, போலீசையோ தொடர்பு கொள்ள வழியில்லை. மேலும் ரைடை டிரைவர் முடித்து விட்டால் நம் ஆப்பில் இருக்கும் SOS பட்டனும் போய்விடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு வழியாக ஓலா நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியபோது நீங்கள் ஆதாரங்களை இமெயில் மூலம் அனுப்புங்கள் என கூறினார்கள்.

MOST READ: ஏழைத்தாயின் மகனுக்கு சொந்தமாக கார் கூட இல்லையாம்...

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

2. கொட்டும் மழையில் எங்கள் குடும்பத்தை நடுரோட்டில் இறக்கிவிட்டார் ஓலா கேப் டிரைவர். இந்த பிரச்னையை நாம் சற்று பொருத்து கொள்ள வேண்டும் என எங்களுக்கு தெரியும். குழந்தைகளுக்கு எப்படி தெரியும்? இவை அனைத்தும் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்தது. இதை தடுக்க என்ன வழி இருக்கிறது?

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

3. மேலும் இந்த புகார் குறித்து ஒலாவிடம் சொன்னபோது அவர்கள் அந்த டிரைவரை பிளாக் லிஸ்ட் செய்வதாக அறிவித்தனர். அதை எழுத்துப்பூர்வ ஆதாரமாக வழங்க வலியுறுத்தியபோது அதை மறுத்துவிட்டனர். அதற்கு என்ன காரணம்?

4. இந்த சம்பவம் நடந்த போது அங்கிருந்த டிராபிக் போலீஸ் மற்றும் பொதுமக்கள் உதவவில்லையெனில் எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இதற்காக ஓலா நிறுவனம் என்ன செய்துள்ளது?

MOST READ:ஓட்டை, உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கம்..

நடுரோட்டில் கைக்குழந்தையை இறக்கவிட்ட ஓலா டிரைவர்

பாலாவின் பார்வையில்...

இந்தியாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் தொழிற்நுட்ப புரட்சிக்கு மத்தியில் இந்த செல்போன் மூலம் ஆப் புக் செய்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மிக அவசியமாகி விட்டது. அதில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. ஒலா நிறுவனமானது, வாடிக்கையாளர் சேவை மையத்தை எளிதில் தொடர்பு கொள்ளும்படி அமைக்க வேண்டும். அதே நேரத்தில் ஓலாவிடம் உள்ள ஓட்டுநர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

Most Read Articles

பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆர் 1250 ஜிஎஸ் பைக்கின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்.

Tamil
English summary
Rude ola cab-driver showed his anger on family. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more