இனி பெட்ரோல் போட வரி மட்டுமல்ல.. வட்டியும் கட்டணும்.. மக்கள் வயிற்றில் புளியை கரைக்கும் புது திட்டம்

இனி வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப வரி மட்டுமல்லாது வட்டியும் கட்ட வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப வரி மட்டுமல்லாது வட்டியும் கட்ட வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு என மாதந்தோறும் தனியாக பெருந்தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் ஆளாகியுள்ளளனர்.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

ஆனால் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

குறிப்பாக மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீதுதான் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி உருவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் கிண்டல் அடிக்கும் வகையில் மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறந்து வருகின்றன.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

வருங்காலங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப, வங்கிகளில் லோன்தான் வாங்க வேண்டும் என்பது போன்ற மீம்ஸ்களும் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அதிகம் உலா வருகின்றன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மீம்ஸ்கள் தற்போது உண்மையாகியிருக்கிறது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

வாகனங்களுக்கு கடன் உதவி வழங்கி வரும் மிக பிரபலமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம்தான் (Shriram Transport Finance Company-STFC), பெட்ரோல், டீசலுக்கும் கூட லோன் வழங்கும் திட்டத்தை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

இந்த திட்டத்தின் கீழ், பெட்ரோல், டீசல் நிரப்ப வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக பெட்ரோல், டீசலை கடனாக பெறலாம். வாடிக்கையாளர்களின் திறன்களை பொறுத்து, பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கான குறிப்பிட்ட அளவு கடன் தொகை நிர்ணயம் செய்யப்படும்.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

புதிய தலைமுறை வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள், பெட்ரோல் பங்க்கில் தங்களது செல்போன் நம்பரை மட்டும் தெரிவித்தால் போதும். இதன்மூலம் பணம் கொடுக்காமல், எரிபொருளை கடனாக நிரப்பி கொள்ளலாம்.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

அதாவது பெட்ரோல், டீசலுக்கு லோன் வழங்கும் திட்டமானது, ஓடிபி (OTP) அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கடனாக நிரப்பிய பெட்ரோல், டீசலுக்கான பணத்தை 15 முதல் 30 நாட்களில் திருப்பி செலுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

என்றாலும் இதற்கு குறைந்தபட்ச வட்டி வசூலிக்கப்படும். ஆனால் பெரிய அளவில் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமோ? என்று வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் இந்த திட்டத்தில் முதற்கட்டமாக ஒரு லிட்டர் டீசலுக்கு 85 பைசா மானியம் வழங்கப்படுகிறது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

எனவே வட்டியானது, மானிய தொகையிலேயே பிடித்தம் செய்யப்பட்டு விடும். அதாவது மானிய தொகையை கழித்து விட்டுதான் வட்டி நிர்ணயிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் வட்டி பாதிப்பு எதுவும் ஏற்படாது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

முதற்கட்டமாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Hindustan Petroleum Corporation Ltd-HPCL) நிறுவன பங்க்குகளில் மட்டும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டாக இணைந்துதான் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த மே மாதமே செய்து கொள்ளப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

முதற்கட்டமாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்க்குகளில் மட்டும்தான் என்றாலும், வாடிக்கையாளர்களின் வரவேற்பை பொறுத்து, இதர எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

தொடக்கத்தில் மத்திய அரசே நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வந்தது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடமே வழங்கப்பட்டது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

இதன்பின் பெட்ரோல், டீசல் விலையை, மாதத்திற்கு 2 முறை அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வந்தன. ஆனால் இந்த திட்டத்திலும் மாற்றம் கொண்டு வந்து, தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் திட்டத்தை அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

இதன்படி பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறை கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு சில நாட்கள் மட்டுமே மிகவும் அரிதிலும் அரிதாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

ஆனால் பெரும்பாலான நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டே வருகிறது. பொதுமக்கள் மத்தியில் அதனையும் மறைக்க ஒரு சூட்சமத்தை எண்ணெய் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. அதாவது தினசரி பைசா கணக்கில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

பைசா கணக்கில் மட்டுமே விலை உயர்த்தப்படுவதால், ஆரம்பத்தில் விலை உயர்வை பொதுமக்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இன்று விண்ணை முட்டி நிற்கிறது. சற்று தாமதமாகதான் எண்ணெய் நிறுவனங்களின் சூட்சமம் புரிய தொடங்கியது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

கடந்த 1.4.2017 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 69.11 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 59.16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சென்னையில் இன்றைய நிலவரப்படி (12-10-2018) ஒரு லிட்டர் பெட்ரோல் 85.73 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

அதாவது சுமார் 18 மாதங்களில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 16.62 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 20.04 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. விண்ணை முட்டும் இந்த விலை உயர்வு பொதுமக்களை கவலையடைய செய்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

எனவே தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இதுவரை செவிமடுக்கவில்லை.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

அதேபோல் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே அதற்கு பதிலாக ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

இதுபோன்று பல்வேறு வழிகளில் பொதுமக்கள் மீது விலை உயர்வு சுமத்தப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசலுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அதிகம் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசலுக்கு லோன்...

ஆனால் பெட்ரோல், டீசல் நிரப்ப லோன் கிடைக்கிறதே என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைவதா? அல்லது லோன் வாங்கி பெட்ரோல், டீசல் நிரப்பும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதே என்பதை நினைத்து கவலை கொள்வதா? என்பதுதான் தெரியவில்லை.

Most Read Articles

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Shriram Transport Finance Company Offers Loan For Petrol And Diesel. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X