கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்த மெக்கானிக்

ரப்பர் பெல்ட் பழுதான காரை சரி செய்ய ரூ.1.68 லட்சம் செலவாகும் என ஸ்கோடா டீலர்ஷிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த காரை, சாதாரண மெக்கானிக் ஒருவர், ஆயிரம் ரூபாய் செலவில், சரி செய்து கொடுத்துள்ளார்.

By Arun

வெறும் ரப்பர் பெல்ட் பழுதான காரை சரி செய்ய ரூ.1.68 லட்சம் செலவாகும் என ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரை, சாதாரண மெக்கானிக் ஒருவர், வெறும் ஆயிரம் ரூபாய் செலவில், சரி செய்து கொடுத்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நவீன். இவரது நண்பர் ஒருவர், ஸ்கோடா லாரா (Skoda Laura) கார் வைத்துள்ளார். இந்த காரின் உரிமையாளருடைய மகன், அதாவது நவீனின் நண்பரது மகன், கடந்த 16ம் தேதி, தங்களது ஸ்கோடா லாரா காரை ஓட்டி கொண்டு வெளியே சென்றார்.

*Images for representational purpose only.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

அப்போது திடீரென கார் பழுதாகி நின்று விட்டது. எவ்வளவு முயன்றும் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. நல்லவேளையாக அருகிலேயேதான் வீடு இருந்தது. எனவே மற்றொரு வாகனம் மூலம் டவ் (tow) அடித்து, தங்களது ஸ்கோடா லாரா காரை, எப்படியோ வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார்.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

மறுநாள், அதாவது ஆகஸ்ட் 17ம் தேதி, நவீனின் நண்பரும், அவரது மகனும், ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற (Autobahn Enterprises Pvt. Ltd) ஸ்கோடா இந்தியா நிறுவன டீலரை அணுகினர். பின்னர் தங்கள் காரில் ஏற்பட்ட பிரச்னை குறித்து தெரிவித்தனர்.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

இதன்பின்னர் அந்த டீலர்ஷிப்பில் இருந்து வந்த ஊழியர்கள், காரை மீண்டும் டவ் அடித்து, தங்களது சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மெக்கானிக்குகள், காரை சோதித்து பார்த்தனர். பின்னர் காரை சரி செய்ய 1.68 லட்ச ரூபாய் செலவு ஆகும் என எஸ்டிமேட் (Estimate) கொடுத்தனர்.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

அதாவது ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு 1.43 லட்ச ரூபாய் செலவாகும் எனவும், லேபர் சார்ஜ் ரூ.25 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவீனின் நண்பருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த ஸ்கோடா டீலர், தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என அவர் கருதினார்.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

இதன்பின் பாரத் ஆட்டோ அசோசியேட்ஸ் என்ற சிறிய நிறுவனத்தை சேர்ந்த நிதின் என்பவரை, நவீனின் நண்பர் அழைத்தார். பாரத் ஆட்டோ அசோசியேட்ஸ் என்பது ஒரு கார் சர்வீஸ் சென்டர் ஆகும். ஆனால் அது, ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது அல்ல.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

இருந்தாலும் பரவாயில்லை என நினைத்த நவீனின் நண்பர், காரை அங்கேயே கொண்டு செல்வது என முடிவெடுத்தார். ஆனால் காரை விடுவிக்க வேண்டுமென்றால், ரூ.3 ஆயிரம் கட்ட வேண்டும் என ஸ்கோடா டீலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

காரில் என்ன குறை என்பதை கண்டறிந்து, அதற்கு எஸ்டிமேட் போட்டதற்குதான் அந்த 3 ஆயிரம் ரூபாய் போல! இருந்தாலும் நவீனின் நண்பர் அந்த ரூ.3 ஆயிரத்தையும் செலுத்தி விட்டார். வேறு என்ன செய்வது? காரை வெளியில் எடுத்தாக வேண்டுமே.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

அதன்பின் வொர்லி என்ற பகுதியில் உள்ள பாரத் ஆட்டோ அசோசியேட்ஸின் ஒர்க்ஸாப்பிற்கு, நவீனின் நண்பரது கார் கொண்டு செல்லப்பட்டது. ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் குர்லா என்ற பகுதியில் உள்ளது.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

குர்லாவில் இருந்து வொர்லி வரை, நவீனின் நண்பரது கார், மீண்டும் டவ் அடித்தே கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்த மெக்கானிக் காரை பரிசோதித்து பார்த்து விட்டு, வெறும் 1,062 ரூபாய்தான் செலவாகும் என எஸ்டிமேட் கொடுத்தார்.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

இதன்பின் நடந்தவற்றை நவீன் விவரிக்கிறார். ''பாரத் ஆட்டோ அசோசியேட்ஸின் ஒர்க்ஸாப்பிற்கு காரை கொண்டு வந்தோம். அங்குள்ள மெக்கானிக் காரை சோதித்து பார்த்து விட்டு, ரப்பர் பெல்ட்டை மட்டும் மாற்ற வேண்டும் என கூறினார். இதற்கு லேபருடன் சேர்த்து வெறும் 1,000 ரூபாய் மட்டுமே செலவானது.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

காரில் என்ன பழுது? என்பதை கண்டறிந்து, அதனை சரி செய்வதற்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே ஆனது. ஆனால் ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரான ஆட்டோபான் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், 1.68 லட்ச ரூபாய்க்கு எஸ்டிமேட் கொடுத்தனர்.

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

தற்போது எனது நண்பர் காரை வழக்கம்போல பயன்படுத்தி வருகிறார். காரில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படவில்லை. ஒரு சிறிய கேரேஜை சேர்ந்த மெக்கானிக், வெறும் 1,000 ரூபாய் செலவில் காரை சரி செய்து கொடுத்து விட்ட நிலையில், ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில் எதற்காக ரூ.1.68 லட்சம் கேட்டனர்?

கார் ஓனரிடம் 1.68 லட்சம் சுருட்ட முயன்ற ஸ்கோடா டீலர்.. 1,000 ரூபாயில் பழுதை நீக்கிய மெக்கானிக்

அவர்களின் நோக்கம் என்ன? என்பது எங்களுக்கு புரியவில்லை'' என்றார். இந்த சம்பவம், கார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவங்களை எல்லாம் நவீன்தான், இணையதளங்களின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அத்துடன் பில் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Source: Team-BHP

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda India Dealer Gives Estimate of Rs 1.68 Lakh – Owner gets Car Fixed for Rs 1,000 from Small Garage. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X