இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஸ்கோடா நிறுவனம் ஏற்க இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்தியாவுக்காக உருவாக்கப்ப

By Shashikant Mourya

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஸ்கோடா நிறுவனம் ஏற்க இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

இந்திய கார் மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடிப்பதற்கான புதிய திட்டத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் வகுத்துள்ளது. "இந்தியா 2.0 புரொஜெக்ட்" என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி, இந்தியா மார்க்கெட்டிற்கு தக்க அம்சங்களுடன் பல புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

இந்த நிலையில், இந்தியாவுக்கான புதிய கார்களை உருவாக்கும் பொறுப்பை தனது கீழ் செயல்படும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்திடம் ஒப்படைக்க ஃபோக்ஸ்வேகன் குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் வழங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB பிளாட்ஃபார்ம் இந்தியாவிற்கான பிரத்யேக அம்சங்களுடன் மாறுதல் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவுக்காக MQB A0-IN என்ற புதிய பிளாட்ஃபார்மில் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கார்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் முதல் மாடலை 2020ம் ஆண்டில் அறிமுகப்படுத்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பிளாட்ஃபார்மில் முதல் மாடலாக புதிய எஸ்யூவி உருவாக்கப்பட இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேர் போட்டியாக இருக்கும்.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

இந்த புதிய எஸ்யூவி விஷன் எக்ஸ் என்ற கான்செப்ட் மாடலின் அடிப்படையிலான டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கும். சர்வதேச அளவில் கார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கான்செப்ட் எஸ்யூவியின் அடிப்படையில் இந்திய வாடிக்கையாளர்களின் ரசனைக்கு தக்கவாறு சில மாற்றங்களுடன் புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

விஷன் கான்செப்ட் அடிப்படையில் புதிய எஸ்யூவி மாடல் ஃபோக்ஸ்வேகன் பிராண்டிலும் வெளிவர இருக்கிறது. ஆனால், இந்த இரு எஸ்யூவி மாடல்களும் இரு நிறுவனங்களின் தனித்துவான டிசைன் அம்சங்கள், லட்சினைகளுடன் வருகிறது.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

புனே அருகே சகன் தொழிற்பேட்டையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையை ஸ்கோடா நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்த ஆலையில் ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ மற்றும் வென்ட்டோ கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

தற்போதுள்ள உற்பத்தி பிரிவுகளுடன் இந்தியாவிற்கான MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் புதிய கார்களுக்காக புதிய உற்பத்தி பிரிவும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த புதிய உற்பத்தி பிரிவில் இரண்டு பிராண்டுகளின் கார்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இரண்டு பிராண்டுகளின் புதிய கார்களின் வடிவம், உதிரிபாகங்கள் உள்ளிட்டவை பொதுவானதாக இருக்கும்.

இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஏற்கும் ஸ்கோடா!!

இதனால், இந்தியாவிற்கான புதிய கார்களை உருவாக்குவதற்கான வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செலவீனம் வெகுவாக கட்டுப்படுத்தும் என்று ஃபோக்ஸ்வேகன் குழுமம் கருதுகிறது. அத்துடன், உற்பத்தி திறனும் செம்மைப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை தயாரிக்கும் பொறுப்பை ஸ்கோடா நிறுவனம் ஏற்க இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்தியாவுக்காக உருவாக்கப்படும் கார்களை தயாரிக்கும் பொறுப்பு ஸ்கோடா வசம் செல்கிறது. இதற்காக புனே ஆலையில் புதிய உற்பத்திப் பிரிவும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Story first published: Saturday, June 23, 2018, 12:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X