வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி (SPEED GOVERNOR) கட்டாயமாக்கப்பட்ட சட்டத்தை நீக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக மத்திய போக்குவரத்துக்கு துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் 58 ஆவது SIAM ஆண்டு மாநாடு (58TH SIAM ANNUAL CONVENTION) டெல்லியில் கடந்த 6ந் தேதி நடைபெற்றது. இதில் பேசிய நிதின் கட்கரி இந்த தகவலை வெளியிட்டார்.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

கடந்த மே மதம் அனைத்து வர்த்தக வாகனத்திற்கும் ஸ்பீட் கவர்னர் சாதனம் பொருத்துவதை கர்நாடக உயர்நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டது. சாலை பாதுகாப்பை அதிகப்படுத்த ஏதுவாய் அமைந்தாலும் போக்குவரத்து துறையின் பல வல்லுநர்களால் இது பல விமர்சனங்களை எதிர்கொண்டது.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆணையின்படி, இந்த ஸ்பீட் கவர்னர் கட்டுப்பாட்டில் இயங்கும் வாகனங்களில் அதிவேக அளவு, பஸ் மற்றும் வாடகை வண்டிகளுக்கு 80KMH என்றும், டிரக்குகளுக்கு 60KMH என்றும், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு 40KMH என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

ஸ்பீட் கவர்னர்ஸ் எனப்படும் இந்த வேக கட்டுபாட்டு கருவி வாகனத்தின் அதிகபட்ச வேகத்தை வரையறுக்க வல்லது. இதனை நடைமுறை படுத்த இந்திய அரசாங்கம் சென்ட்ரல் மோட்டார் வெஹிகிள்ஸ் ரூல்ஸ் (CENTRAL MOTOR VEHICLE RULES) எனப்படும் சட்டத்தில் மாற்றங்கள் செய்தாக வேண்டும். அதுவே இது முறையே அமுல்படுத்துவதற்கான வழி.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயமில்லை என்பதற்கான முறையான அறிவிப்பு வரும் வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஆணை அமலில் இருக்கும் என்றும் நிதின் கட்காரி கூறி இருக்கிறார்.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

இதனிடையே, பேட்டரியில் இயங்கும் வர்த்தக வாகனங்கள், பயோ எரிபொருள் , மற்றும் CNG வாகனங்களுக்கு அனைத்துவிதமான பர்மிட்டுகளிலிருந்தும் விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, இந்த சந்தையில் வர்த்தக வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வருவதற்கு வழி ஏற்படும்.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

மேலும் கமர்சியல் வாகனப்பிரிவில் 15 சதவிகித வாகனத்தை எலக்ட்ரிக் மயமாக்கவும் நிதின் கட்கரி திட்டமிட்டுள்ளார். இது இன்னும் ஐந்து வருடங்களில் சாத்தியப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

மேலும் டெல்லியில் நடைபெற்ற கலந்தாய்வில் டிரைவர் அசிஸ்டன்ஸ்(DRIVER ASSITANCE) எனப்படும் புதிய தொழில்நுட்பமும் அனைத்து வாகனங்களிலும் வரும் 2022 இல் கட்டாயமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அரசாங்கம் வருகின்ற 2019 முதல் அனைத்து வண்டிகளிலும் ABS , இரட்டை ஏர் பேக்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவற்றை கட்டாயமாக்க திட்டமிட்டுகொண்டுருக்கிறது என்றார்.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

மேலும் இனிவரவிருக்கும் புதிய வாகனங்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீட் ரிமைண்டர் போன்றவற்றை எச்சரிக்கை ஓலி கொண்டு நம்மை ஒழுங்கப்படுத்த வல்லதாய் அமையும். இந்த ஒலியானது 80KM இல் ஒருமுறையும் 120KM இல் ஒருமுறையும் நம்மை எச்சரிக்கும்.

வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாய சட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு!

இந்த ஸ்பீட் கவர்னரானது கர்நாடகாவில் ஏற்கனவே கட்டாயப்படுத்தப்பட்டு அமுலுக்கு வந்த நிலையில் , அந்த மாநிலத்தின் சாலை பாதுகாப்பு மேம்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் பலதரப்பட்ட விமர்சனங்களால் இதன் அரசாங்க அறிவிப்பை சற்று தள்ளி வைத்துள்ளார் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி . கூடிய விரைவில் இந்த திட்டம் இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Most Read Articles
English summary
The central government will be abolishing the mandatory rule of speed governors on commercial vehicles. The Union Minister, Nitin Gadkari spoke about the abolishment at the 58th SIAM Annual Convention held today (6th September 2018).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X