சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

இந்தியாவில் உலக சினிமாவின் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. பலர் இந்திய சினிமாக்களை விட உலக சினிமாக்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியர்கள் உலக சினிமாக்களை ரசிப்பதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஹீரோ கதைகள்தான். இந்திய சினிமாவில் இன்றளவும் எடுக்கப்படாத அல்லது எடுத்தும் பெரிய அளவில் வெற்றி பெறாத பட வகை அது. மக்கள் இந்த மாதிரியான படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

இந்த வகையான உலக சினிமாக்களை மார்வெல், டிசி போன்ற நிறுவனங்கள்தான் தயாரித்து வருகின்றன. ஒரு காலத்தில் காமிக்ஸாக வந்த கதைகள் எல்லாம் இன்று திரைப்படங்களாக வரத்துவங்கியுள்ளன. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு கோர்வை என பல ஆண்டுகளாகவே சூப்பர் ஹீரோ கதைகள் மெருகேற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

இந்தியாவில் பேட்மேன், அயர்ன்மேன், ஹல்க், தோர் போன்ற திரைப்படங்கள் பெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது சூப்பர் ஹீரோக்களாக நடித்தவர்கள் உண்மையில் என்னென்ன கார்களை பயன்படுத்துகிறார்கள்? அந்த கார்களின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

ராபட் டொனே (அயர்ன் மேன்)

ஆடி ஆர்8

மார்வெல் தயாரிப்பில் உள்ள படங்களில் உச்சகட்டமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பவர் இவர்தான். இது மட்டும் இல்லாமல் இவர் வேறு சில பிரபலமான படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் குறிப்பிடும்படியான படம் ஷெர்லாக்ஹோம்ஸ். இவர் தனது முக்கிய பயன்பாட்டிற்காக 2016ம் ஆண்டு மாடல் ஆடி ஆர்8 காரை வைத்திருக்கிறார்.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

நிஸான் ஜிடி-ஆர்

மேலும் இவரிடம் 2010ம் ஆண்டு மாடல் நிஸான் ஜிடி-ஆர் காரும் இருக்கிறது. இவர் பெரும்பாலான நேரங்களில் இந்த காரில்தான் பயணிக்கிறார். இந்த கார் 3.8 லிட்டர் டுவின் டர்போ வி6 இன்ஜினை கொண்டிருக்கிறது. இது அதிகபட்சமாக 528 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

டேவ் பாட்டிஸ்டா (டிரக்ஸ் தி டெஸ்ட்ராயர்)

பென்ட்லி கான்டினென்டல் ஜிடி

WWE போட்டியில் கலந்து கொண்டு ஏற்கனவே உலக அளவில் புகழ்பெற்றவர் பாட்டிஸ்டா. இவர் டிரக்ஸ் என்ற கதாபாத்திரம் மூலம் சூப்பர் ஹீரோவாகியும் பிரபலமாகியுள்ளார். இவரது கராஜிலும் ஏகப்பட்ட கார்கள் உள்ளன. இவரது தனித்துவம் என்ன என்றால், இவரது எல்லா கார்களும் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். அவரது கராஜில் இருக்கும் முக்கியமான கார் என்றால் அது கான்டினென்டல் ஜிடிதான். இந்த கார்தான் உலகின் சிறந்த டூரிங் காராக இருக்கிறது.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

லம்போர்கினி முர்சிலேகோ எல்பி-640

பாட்டிஸ்டா லம்போர்கினி முர்சிலேகோ எல்பி-640 சூப்பர் காரையும் சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த கார் 6.5 லிட்டர் இன்ஜினை கொண்டுள்ளது. இது 631 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் புகழ்பெற்ற இயக்குநர் கிரிஸ்டோபர் நொலன் இயக்கிய பேட்மேன் தி டார்க் நைட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

பென் அஃப்லீக் (பேட்மேன்)

டோஜ் செலஞ்சர் ஹெல்கேட் எஸ்ஆர்டி

பென் பேட்மேன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவறா? என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து பேட்மேனாக நடித்துக்கொண்டே நன்றாக சம்பாதித்து விட்டார். தற்போது அவரிடம் டோஜ் செலஞ்சர் ஹெல்கேட் எஸ்ஆர்டி கார் இருக்கிறது. இதில் 6.2 லிட்டர் சூப்பர் சார்ஜ்டு, வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 707 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும்.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

செவர்லே செவலே எஸ்எஸ்

பென் வின்டேஜ் கார்களை அதிகமாக விரும்புபவர். இவரிடம் 1966ம் ஆண்டு மாடல் செவர்லே செவேலே எஸ்எஸ் விண்டேஜ் கார் உள்ளது. இது நீளமான பாடியை கொண்டது. இதன் இன்டீரியரை மாற்றியமைத்துள்ளார். தற்போது இது பயங்கர மாடர்ன் காராக காட்சியளிக்கிறது.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

மார்க் ருஃப்பலோ (தி ஹல்க்)

பிஎம்டபிள்யூ ஐ3

திரைப்படங்களில் பெரும்பாலான நேரங்களில் பச்சை நிறத்தில் பெரிய உருவமாக மாறிய தோற்றத்தில் இவரது கதாபாத்திரம் காட்டப்படுவதால் இவர் திரையில் வரும் நேரம் மிக குறைவுதான். இருந்தாலும் இவருக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஒரு இயற்கை நல விரும்பி. அதனால் தற்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பிஎம்டபிள்யூ ஐ3 காரை வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்த முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். கடந்த 2016ம் ஆண்டு உலகின் மூன்றாவது சிறப்பாக விற்பனையாகும் காராக கருதப்படுகிறது. இதுவரை சுமார் 65,000 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

டெஸ்லா மாடல் எஸ்

மார்க்கிடம் டெஸ்லா மாடல் எஸ் காரும் உள்ளது. இந்த காரும் முழுவதுமாக எலெக்ட்ரிக்கில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனமாக இருக்கிறது. இவருக்கு எப்பொழுதும் எளிமையான வாழ்வே பிடித்திருக்கிறது. பெரும்திறன் கொண்ட கார்களை வாங்க திறன் இருந்தும் அவரிடம் இந்த கார்களே உள்ளன.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

கிரிஸ் ஹெம்ஸ்வோர்த் (தோர்)

காடில்லாக் எஸ்கலேட்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிஸ் ஒரு குடும்பஸ்தர். இதனால் அவர் எஸ்யூவி காரை விரும்புகிறார். அவரிடம் காடில்லாக் எஸ்கலேட் என்ற பவர்புல் எஸ்யூவி கார் உள்ளது. இந்த காரில், 6.2 லிட்டர் எகோ டெக் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 420 ஹார்ஸ் பவர் திறனை வெளிப்படுத்தும். மேலும் இவரிடம் ஹம்மர் காரும் உள்ளது.

சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...

காடில்லாக் எஸ்ஆர் எக்ஸ்

கிரிஸ் இடம் மேலும் ஒரு காடில்லாக் கார் இருக்கிறது. இதுவும் எஸ்யூவி வகை கார்தான். காடில்லாக் எஸ்ஆர் எக்ஸ் காரானது, அவரது மனைவி எல்ஷா பத்தாகி, அவரது இரண்டு மகன்கள் டிரிஸ்டன் மற்றும் ஷாஷா ஹெம்ஸ்வோர்த் மற்றும் மகள் இந்தியா ரோஸ் ஹெம்ஸ்வோர்த் ஆகியார் பயணிக்க ஏற்றது. இவர்கள் குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்றால் இந்த காரைதான் பெரும்பாலும் தேர்வு செய்வார்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Super heros super cars list batman to hulk. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X