ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

சுமார் 3 ஆண்டுகாலம் வளர்ச்சி பாதையிலேயே சென்று கொண்டிருந்த எஸ்யூவி கார்களின் விற்பனை தற்போது தடுமாற்றத்ததை கண்டுள்ளது. விரைவில் அறிமுகமாவுள்ள புதிய கார்கள், நகரங்களில் தேவையை எட்டிய விற்பனை உள்ளிட்ட

By Balasubramanian

சுமார் 3 ஆண்டுகாலம் வளர்ச்சி பாதையிலேயே சென்று கொண்டிருந்த எஸ்யூவி கார்களின் விற்பனை தற்போது தடுமாற்றத்ததை கண்டுள்ளது. விரைவில் அறிமுகமாவுள்ள புதிய கார்கள், நகரங்களில் தேவையை எட்டிய விற்பனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிலை உருவாகியுள்ளது. எனினும் இது தற்காலிக பின்னடைவு தான் என்றும் விரைவில் விற்பனை சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகமாக இருந்தது. அதன் வளர்ச்சியை கண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களே திகைத்து போனார்கள். தொடர்ந்து வளர்ச்சியை சந்தித்து கொண்டே வந்தது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. இதுவரை டாப் கியரில் சென்று கொண்டிருந்த

எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த மார்ச் மாதம் முதல் முதல் கியரில் பயணிக்க துவங்கியுள்ளது. இது ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

எஸ்யூவி ரக கார்களின் விற்பனையை பார்த்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள அந்த ரக கார்களை தயாரிப்பதிலும் மேம்படுத்துவதிலுமே அதிகம் ஆர்வம் காட்ட துவங்கினர். சுமார் 3 ஆண்டுகளாக வளர்ச்சி பாதையிலேயே சென்று கொண்டிருந்த எஸ்யூவி கார் கடந்த மார்ச் மாதம் முதல் தன் வேலையை காட்ட துவங்கியது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி வெளியிட்டுள்ள பட்டியலின் படி கடந்த ஜூலை மாதம் எஸ்யூவி ரக கார்களின் விற்பனை 9 சதவிதம் குறைந்துள்ளது. மார்கெட்டில் கிங்காக வளம் வரும் மாருதி நிறுவனமும் எஸ்யூவி ரக கார் விற்பனையில் சதவீத சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா கார் 7 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

ஹூண்டாய் க்ரெட்டா சம அளவிலான விற்பனையையும், ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் விற்பனை சரிவையும், மஹிந்திரா போலீரோ சம அளவிலான விற்பனையையும், டோயோட்டா இன்னோவா க்ரைட்டா 29 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

கடந்த மார்ச் மாதத்தை பொருத்தவரை க்ரெட்டா கார் மொத்தம் 10,011 கார்கள் விற்பனையாகியிருந்தது. கடந்தாண்டு அதே காலகட்டத்தில் மொத்தம் 10,001 கார்கள் தான் விற்பனையாகிருந்தது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

இன்னோவா காரை பொருத்தவரை மார்ச்சில் 6,952 கார்கள் மட்டுமே விற்பனையாகிருந்தது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 7,252 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதே போல விட்டார ப்ரெஸ்ஸா 13,147 கார்களையும், போலேரோ 9,104 கார்களையும், எக்கோ ஸ்போர்ட் 5,344 கார்களையும் விற்பனை செய்திருந்தது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

இது குறித்து டீலர்களிடம் கேட்டபோது அவர்கள் மார்ச் மாதம் டார்கெட்டை பிடிக்க மொத்த விற்பனை பில்லிங்கை அதிகரித்து. ஏப்ரல் மாதத்தை பொருத்தவரை ப்ரெஸ்ஸா, மற்றும் க்ரெட்டா ஆகிய கார்கள் முறையே மொத்தம் 1.5 சதவீதம் மற்றும் 2 சதவீத வளர்ச்சியை அடைந்தது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

இதனால் மார்ச் மாதத்திற்கு பின் விற்பனை சற்று மந்தமடைந்துள்ளது. ஆனால் இது நிரந்திர பின்னடைவு இல்லை எனவும் மீண்டும் ஹூண்டாய், மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தினால் விற்பனை மேலும் சூடுபிடிக்க துவங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

மேலும் தற்போது நகர் பகுதிகளில் எஸ்யூவி கார்களின் விற்பனை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டிவிட்டது. எஸ்யூவி விற்பனையை மேலும் அதிகரிக்க சிறு நகரங்கள் அல்லது டவுண்களின் உள்ளவர்கள் மத்தியில் இந்த கார் செல்ல வேண்டும். அதன் மூலம் இதன் விற்பனையை அதிகரிக்க வைக்கலாம்.

ரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா?

மேலும் கேப்ஸ் ஓட்டுபவர்கள் எஸ்யூவி ரக கார்களை விரும்பி வாங்க வைத்தால் எஸ்யூவி விற்பனையை அதிகரிக்கலாம். நகர்புறங்களில் எஸ்யூவி விற்பனையை மேம்படுத்துவது இலக்கை எட்டுவதற்கான நல்ல யோசனை இல்லை என ஆட்டோமொபைல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
Top selling SUVs sales getting slow now. Read in Tamil.
Story first published: Thursday, August 16, 2018, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X