நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என விரும்பும் நபரா நீங்கள்? அப்படியானால் நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள். இந்தியா வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் 2வது மிகப்பெரிய நாடான இந்தியாவிடம், பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வளம் போதிய அளவிற்கு இல்லை. எனவே சவுதி அரேபியா, ஈரான், ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது!! கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதால், இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைக்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இவ்வளவு அதிகமான தொகையை செலவிட்டு கொண்டு, இக்கட்டான நிலையில் இந்தியா இருக்கும்போது, மக்கள் பெரும்பாலானோர் பெட்ரோல் மற்றும் டீசலை வீணடித்து கொண்டுள்ளனர்.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

குறிப்பாக சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரிகையில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பெரும்பாலானோர் இன்ஜினை அணைப்பதே இல்லை. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள் வீணாக செலவாகிறது.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

இந்த சூழலில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் Council of Scientific and Industrial Research-Central Road Research Institute (CSIR-CRRI) மற்றும் பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கையில், டூவீலர், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் இன்ஜினை அணைக்காததால், எவ்வளவு எரிபொருள் வீணாக செலவாகி வருகிறது? என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

இதன் அதிர்ச்சிகரமான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கும்போது, டூவீலர், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் இன்ஜினை அணைத்தால், ஒரு ஆண்டுக்கு மட்டும் எரிபொருளுக்காக செலவிடும் 250 கோடி ரூபாயை மிச்சம் பிடிக்க முடியும்.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

இந்தியா போன்ற இவ்வளவு பெரிய நாட்டில் இதன் மூலமாக 250 கோடி ரூபாயை மட்டும்தான் மிச்சம் பிடிக்க முடியுமா? என நினைத்து விட வேண்டாம். இந்த தொகை நாட்டின் தலைநகர் டெல்லியில் மட்டும் என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்!!

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

சிக்னல்களில் 20 வினாடிகளுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தங்களது வாகனத்தின் இன்ஜினை ஸ்விப்ட் ஆஃப் செய்வதை, இந்தியாவில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளும் பழக்கமாக்கி கொண்டால், எரிபொருளுக்காக வீணாக செலவிடப்பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை மிச்சம் பிடிக்க முடியும்!!

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

நம்மில் பெரும்பாலானோர் சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கையில், வாகனத்தின் இன்ஜினை அணைக்காமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் விஷயமானது, நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்கும்போது, வாகனங்களின் இன்ஜினை ஆஃப் செய்வதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்துடன் சேர்த்து, சுற்றுச்சூழலுக்கும் நன்மை ஏற்படுத்த முடியும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

ஆம், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிட்டு வரும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து கொண்டுள்ளது. எனவே சிக்னல்களில் காத்திருக்கும்போது, இன்ஜின் வீணாக இயங்குவதை நிறுத்தினால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாயுக்களின் உமிழ்வு கட்டுப்படுத்தப்படும்.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

அதாவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடிய கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட மோசமான வாயுக்கள் வாகனங்களில் இருந்து வெளியேறுவது குறையும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும்.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

எனவே இனியாவது சிக்னல்களில் காத்திருக்கையில், வாகனங்களின் இன்ஜினை அணைப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். இதன்மூலம் எரிபொருள் வீணாவது தடுக்கப்பட்டு, அவற்றின் இறக்குமதிக்காக இந்தியா செலவிட்டு வரும் தொகையில் ஒரு பெரும் பகுதி மிச்சம் பிடிக்கப்படும்.

நாட்டிற்காக வெறும் 20 வினாடிகள் மட்டும் இதை செய்யுங்கள்! இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது

இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து, நாளை அது நமக்கு நன்மை பயப்பதாகவே அமையும். அத்துடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். எனவே இனியாவது இதனை செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

Most Read Articles
English summary
Switching Off Vehicle Engines While Waiting In The Traffic Signals Could Save Thousands Of Crores. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X