அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

அமெரிக்காவை சேர்ந்த ஜெரனல் மோட்டார்ஸ் என்ற கார் நிறுவனத்தின் சென்னையை சேர்ந்த பெண் திவ்யாவிற்கு தலைமை நிதி அதிகாரி பதவி வழங்கப்படவுள்ளது. சுந்தர் பிச்சைக்கு அடுத்து பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் ப

By Balasubramanian

அமெரிக்காவை சேர்ந்த ஜெரனல் மோட்டார்ஸ் என்ற கார் நிறுவனத்தின் சென்னையை சேர்ந்த பெண் திவ்யாவிற்கு தலைமை நிதி அதிகாரி பதவி வழங்கப்படவுள்ளது. சுந்தர் பிச்சைக்கு அடுத்து பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் பொறுப்பேற்று தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் திவ்யா

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. இந்நிறுவனம் உலகின் மிக புகழ்பெற்ற கார் காடிலாக், செவர்லெட், ஜிஎம்ஜி, ஹோல்டன் உள்ளிட்ட பல்வேறு நிறுவன கார்களை தயாரித்து வருகின்றன.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

உலகின் முன்னனியில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனவங்களில் இதுவும் ஒன்று, இந்நிறுவனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் மாற்றங்களையே செய்யும்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையை பூர்வீகமாக கொண்ட திவ்யா சூர்யதேவரா என்ற பெண் பொறுப்பேற்க உள்ளார். இவர் அந்நிறுவனத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பயணியாற்றி வருகிறார்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

இதுவரை இவர் அந்நிறுவனத்தின் கார்பரேட் நிதி துறையில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். தற்போது தலைமை நிதி அதிகாரியாக உள்ள ஸ்டீவன்ஸ் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒய்வு பெறுகிறார். அந்த பதவிக்காக தற்போது திவ்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

உலகிலேயே ஆட்டோமொபைல் துறையில் இப்பதவியில் அமரும் முதல் பெண் இவர் தான். தற்போது இப்பதிவியில் உள்ள ஸ்டீவன்ஸ் தொடர்ந்து இந்நிறுவனத்தின் ஆலோசகராக பணியாற்றவுள்ளார்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

ஜெனரல் மோட்டார் நிறுவனம் பெண்களுக்கு சம உரிமை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிஇஓ வாக இருக்கும் மேரி பாரா ஒரு பெண் தான். ஆட்டோமொபைல் துறையில் ஒரு பெண் சிஇஓ வாக இருக்கும் நிறுவனம் இது ஒன்று தான்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

கடந்த 13 ஆண்டு காலம் திவ்யா அந்நிறுவனத்தில் பணியாற்றியபோது அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்திருக்கிறார். கார் நிறுவனங்களுக்கு கிரெடிட் வழங்கும் நிறுவனங்கள் கிரெட்களை உயர்த்த இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

திவ்யா சென்னை பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறையில் இளங்களை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். அவர் தனது 22வது வயதில் அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கு எம்பிஏ படிக்க சென்றார்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

இவர் படித்து முடித்தவுடன் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேர்வதற்கு முன்பாக யூபிஎஸ் எனப்படும் இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் மற்றும் பிரைஸ் வாட்டர் ஹவுஸ் காப்பர்ஸ், ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

இறுதியாக கடந்த 2005ம்ஆண்டு ஜெனரல் மோட்டார் நிறுவனத்தில் சேர்ந்தார். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை முதல் கார்பரேட் வர்த்தக துறையில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

இவர் குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ பாரா கூறுகையில் : " திவ்யா அனுபவமும் தலைமை பண்பையும் எங்கள் நிதி செயல்பாட்டில் முன்னர் அவர் செய்த பணியின் போது பார்த்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக நல்ல ரிசல்ட்டை தந்து வருகிறார். தொடர்ந்து அவர் வகிக்க போகும் பதவியிலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன்" இவ்வாறு கூறினார்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

திவ்யா பொறுப்பேற்க உள்ளது குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிதி வழங்கி வரும் ராயல் பேங்க் ஆப் கனடா என்ற வங்கியை சேர்ந்த அதிகாரி ஜோசப் ஸ்பாக் கூறுகையில் : " இனி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் சுலபாமாக வர்த்தகத்தை எங்களால் செய்ய முடியும்" என கூறியுள்ளார்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

திவ்யாவிற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர்கள் குடும்பமாக அமெரிக்காவில் தான் தற்போது வசித்து வருகின்றனர். இவர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த 40 வயதிற்குட்பட்டவர்களில் ஆட்டோமொபைல் துறையில் வளர்ந்து வருபவர்களான பட்டமாக ரைஸிங் ஸ்டார் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

தமிழகத்தை சேர்ந்த பலர் பல நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். உலகின் மிக முக்கிய நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் தமிழரான சுந்தர் பிச்சை வகித்துவருகிறார். இவர் குறித்து தமிழகத்தில் பேசாதவர்களே இருக்க முடியாது என சொல்லலாம்.

அமெரிக்கா கார் கம்பெனியை ஆளப்போகும் தமிழச்சி..சென்னை பொண்ணு திவ்யாவிற்கு உயர் பதவி

அதே போல எச்.சி.எல். என்ற நிறுவனத்தை நிறுவிய ஷிவ் நாடார் என்ற திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் இன்று உலகளவில் மிக முக்கிய தொழிலதிபராக உள்ளார். இந்தியாவில் மிக பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர். இவ்வாறாக தொடர்ந்து உலக அளவில் தமிழர்கள் உலகின் மிக பெரிய நிறுவனங்களில் உயரிய பதிவியில் அமர்ந்து தமிழர்களுக்கு பெருமை சேர்ந்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. 25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்
  2. வாடகை எலக்ட்ரிக் பைக், சார்ஜிங் ஸ்டேஷன்கள்! சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் புது வசதிகள்!
  3. கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்3
  4. இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸ்.... 'மாத்தி யோசி' திட்டத்துடன் பிஎஸ்ஏ குழுமம்!
  5. பெட்ரோலை வைத்து கொண்டு ஆட்டம் போட்ட அரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந்தியா! வெச்ச செக் அப்படி!
Most Read Articles
English summary
Indian Dhivya Suryadevara named CFO of US biggest auto company GM. Read in Tamil
Story first published: Thursday, June 14, 2018, 19:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X