ஓட்டை, உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கம்..

லண்டன் அமைப்பின் உதவியுடன் சென்னையில் வெகு விரைவில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக ஆய்வு நடத்த, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டன் சென்றுள்ளார்.

லண்டன் அமைப்பின் உதவியுடன் சென்னையில் வெகு விரைவில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக ஆய்வு நடத்த, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டன் சென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக முன் வைக்கப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும், எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இது மிகவும் கடினமான ஒன்றாக கருதப்பட்டாலும், இந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, டெல்லி என பல்வேறு மாநில அரசுகளும், பொது போக்குவரத்திற்காக அதிக அளவிலான எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. சில இடங்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

ஆனால் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் சுணக்கம் காட்டி வந்த தமிழக அரசு, சற்றே தாமதமாகதான் கண் விழித்து கொண்டுள்ளது. முதற்கட்டமாக தமிழக தலைநகர் சென்னையில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை மற்றும் லண்டன் சி-40 முகமைக்கு இடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி-40 முகமையானது, லண்டன் மாநகரை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

இதில், மேற்கத்திய நாடுகளை சேர்ந்த முன்னேற்றமடைந்த மாநகரங்கள் உறுப்பினர்களாக உள்ளன. காற்று மாசுபாட்டை குறைப்பது இதன் நோக்கமாகும். தமிழக போக்குவரத்து துறையானது, எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு, லண்டன் சி-40 முகமை உதவி செய்யும்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்வது, தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது, தூய்மையான மின்சாரத்தை வழங்குவது என பல்வேறு பணிகளில், தமிழக போக்குவரத்து துறைக்கு, லண்டன் சி-40 முகமை உதவிகளை வழங்கும்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

இந்த சூழலில், லண்டன் சி-40 முகமையை சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவினர், கடந்த மாதம் 21 முதல் 24ம் தேதி வரை, சென்னையில் முகாமிட்டு ஆய்வு செய்தனர். அப்போது போக்குவரத்து, நிதி மற்றும் எரிசக்தி துறை உயரதிகாரிகளுடனான கலந்தாய்வும் நடத்தப்பட்டது.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

அத்துடன் லண்டனில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க வருமாறு, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது லண்டன் சென்றுள்ளார்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

அரசு கூடுதல் தலைமை செயலர் டேவிதாரும், அமைச்சருடன் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன் மாநகரில் இயக்கப்பட்டு வரும் எலெக்ட்ரிக் பஸ்களையும், எலெக்ட்ரிக் பஸ் டெப்போக்களையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

Transport For London (TFL) அமைப்பின் அதிகாரிகளையும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலர் டேவிதார் ஆகியோர் சந்தித்து பேசினர். TFL எனும் இந்த அரசு அமைப்புதான், லண்டன் மாநகரில் பஸ்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

பின்னர் TFL அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கி வருவது எப்படி? நிர்வகித்து வருவது எப்படி? என்பது தொடர்பாக, தமிழக குழுவினருக்கு, பஸ் வணிக வளர்ச்சி தலைவர் டாம் கன்னிங்டன் விளக்கம் அளித்தார்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

TFL அமைப்பிற்காக எலெக்ட்ரிக் பஸ் பணிமனை அமைக்க உதவிய போக்குவரத்து ஆலோசகர் மைக் வெஸ்டன் என்பவரையும் தமிழக குழுவினர் சந்தித்து பேசினர். TFL அமைப்பிற்காக எலெக்ட்ரிக் பஸ் பணிமனை அமைத்ததில், மைக் வெஸ்டனின் பங்கு அளப்பரியது.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

இதன் தொடர்ச்சியாக வாட்டர் லூ என்ற பகுதியில் இயங்கி வரும் எலெக்ட்ரிக் பஸ் பணிமனையையும், அமைச்சர் தலைமையிலான தமிழக குழுவினர் பார்வையிட்டனர். அங்கு ‘Go Ahead' என்ற இயக்கத்தின் இன்ஜினியரிங் டைரக்டர் ரிச்சர்ட் ஹாரிங்டன் என்பவரையும் சந்தித்து பேசினர்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

அத்துடன் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்தும் தமிழக குழுவினர் கேட்டறிந்தனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ''லண்டன் சி-40 முகமையின் உதவியுடன், வெகு விரைவில் சென்னையில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும்.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

அதற்கு இந்த பயணம் பெரும் உதவியாக இருந்தது'' என்றார். எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்காக, லண்டன் சி-40 முகமையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் இந்திய நகரம் சென்னைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டை உடைசல்களுக்கு தீர்வு.. லண்டன் உதவியுடன் தமிழகத்தில் அதிநவீன எலெக்ட்ரிக் பஸ்கள்..

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பஸ்கள் ஓட்டை உடைசல்களாகதான் காணப்படுகின்றன. இந்த சூழலில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சென்னை பயணத்தின் மூலம், அதற்கு விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படும் ஏத்தர் 450 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Tamilnadu Team Visits London to Explore Electric Buses. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X