டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

அடுத்த மாதம் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இந்த புத்தம் புதிய எஸ்யூவியை சோதித்து பார்க்கும் ம

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

அடுத்த மாதம் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இந்த புத்தம் புதிய எஸ்யூவியை சோதித்து பார்க்கும் மீடியா டிரைவ் நிகழ்ச்சி துவங்கி இருக்கிறது. நாளை மறுதினம் இந்த புதிய எஸ்யூவியை டிரைவ்ஸ்பார்க் டீம் சோதித்து பார்க்க ஆயத்தமாகி வருகிறது.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த சூழலில், புதிய ஹேரியர் எஸ்யூவியின் படங்கள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி 4,598 மிமீ நீளமும், 1,894 மிமீ அகலமும், 1,706 மிமீ உயரமும் கொண்டது.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இதன் வீல் பேஸ் 2,741 மிமீ ஆக உள்ளது. இந்த எஸ்யூவி 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வந்துள்ளது. இதனால், உட்புறத்தில் இந்த 5 சீட்டர் எஸ்யூவி மிக சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று நம்பலாம். 1,675 கிலோ எடை கொண்டது. போட்டியாளர்களைவிட சற்று கூடுதல் எடை கொண்ட மாடல் டாடா ஹேரியர்.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் HID புரொஜெக்டர் லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட இருக்கின்றன. பின்புறத்தில் 3D எல்இடி லைட்டுகளுடன் டெயில் லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கிறது. 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், டாப் வேரியண்ட்டில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த எஸ்யூவியின் உட்புறம் கருப்பு மற்றும் ஓக் பிரவுன் என்ற இரட்டை வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு டிஜிட்டல் திரைகள் டேஷ்போர்டில் இடம்பெற்றுள்ளன. 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேஷ்போர்டின் மத்தியில் பொருத்தப்பட்்டு இருக்கிறது.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும். ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் செய்யும் வசதி சிறிது காலம் கழித்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. நேவிகேஷன், பொழுதுபோக்கு வசதிகளையும் பெற முடியும்.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் மற்றொரு மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, காரின் இயக்கம் மற்றும் ஓடிய தூரம் உள்ளிட்ட பல தகவல்களை ஓட்டுனர் பெற முடியும். இந்த எஸ்யூவியில் புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், ரியர் டீஃபாகர் வசதிகள் இடம்பெற்றிருக்கிறது.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த புதிய எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகளை பெற்றிருக்கும். டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டத்தின் மூலமாக சாதாரண, ஈரப்பதம் மிக்க மற்றும் கரடு முரடான சாலைகளுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் வசதியையும் அளிக்கும்.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்டட்ரோல், ரோல்ஓவர் மிட்டிகேஷன், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியானது XE, XM, XT மற்றும் XZ ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. காலிஸ்ட்டோ காப்பர், ஏரியல் சில்வர், தெர்மிஸ்டோ கோல்டு, ஆர்கஸ் ஒயிட், டெலிஸ்ட்டோ க்ரே ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும்.

ரூ.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் டாடா ஹேரியர் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும், இந்த புதிய எஸ்யூவி ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் வர இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கிறது.

Most Read Articles
English summary
Tata Motors has revealed Harrier SUV specification and features list officially. It will available 4 variants and might be priced between Rs.16 lakh to Rs.21 lakh (On-road).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X